வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

40 வருட திரையுலக வெற்றிக்கு தளபதி மெயின்டைன் செய்யும் 5 சீக்ரெட்.. இரண்டு தலைமுறையாக கொண்டாடப்படும் ஹீரோ

Thalapathy Vijay Birthday: தளபதி விஜய் இன்று தன்னுடைய 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். 90களின் ஆரம்ப காலகட்டத்தில் ஆரம்பித்த இவருடைய திரைப்பயணம் இன்றுவரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. அவருடன் வளர்ந்து வந்த சமகாலத்து ஹீரோக்கள் எல்லாம் இன்று தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களாக பார்க்கப்படும் நிலையில், விஜய் மட்டும் குழந்தைகள் வரை கொண்டாடும் இளம் ஹீரோவாக இருக்கிறார். விஜய் அப்படி இருப்பதற்கு காரணமே இந்த 5 விஷயங்கள் தான்.

இயக்குனர்கள்: விஜய் தன்னை இயக்க தேர்ந்தெடுக்கும் இயக்குனர்களின் லிஸ்டை அவருடைய ரசிகர்களாலேயே கணிக்க முடியாது. வளர்ந்து வந்த இயக்குனர்களை தேர்ந்தெடுக்காமல் திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்கிறார். அட்லீ, லோகேஷ் என தன்னை விட இளம் இயக்குனர்களுடன் பயணிப்பதால் தான் அவர்களின் கதைகளில் தளபதி இன்னும் இளமையாக காட்டப்படுகிறார்.

Also Read:ஒரு மாசமாக திட்டம் போட்ட தளபதி.. துளிகூட கை கொடுக்காத SAC குடும்பம்

சர்ச்சைகள்: கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தளபதியை சுற்றி சர்ச்சைகள் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கிறது. இந்த சர்ச்சையை விஜய் என்னும் நடிகனை இளைஞர்களுக்கு நியாபகப்படுத்தி கொண்டே இருக்கிறது. நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி, ஓட்டு போட சைக்கிளில் சென்றது, கல்வி விருது வழங்கும் விழா என சமூக வலைத்தளங்களில் எப்பவும் ட்ரெண்டில் இருப்பதும் ஒரு காரணம்.

உடலமைப்பு: விஜய்க்கு 49 வயதாகிவிட்டது என்று அவர் பிறந்தநாள் கொண்டாடும் போது தான் தெரிகிறது. தன்னை இளமையாக வைத்துக்கொள்ள தன்னுடைய பிட்னஸில் அவர் காட்டும் அக்கறை தான் அவருக்கு கூடுதல் அழகு. தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அவ்வப்போது காலத்திற்கு ஏற்ப தன்னுடைய ஸ்டைலை மட்டும் மாற்றி இளமையாக இருக்கிறார் விஜய்.

Also Read:அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்ட விஜய்.. பதறிப் போய் கூட்டணி போட வந்த முக்கிய கட்சிகள்

நடிகைகள்: விஜய் இன்னும் இளம் ஹீரோ போல் இருக்க மற்றொரு காரணம் அவருடைய ஹீரோயின்களும் தான். வளர்ந்து விட்ட ஹீரோ, இனி எந்த ஹீரோயினுடன் நடித்தால் என்ன என்று இல்லாமல் ராஷ்மிகா, பூஜா ஹெக்டே என இளம் ஹீரோயின்களுடன் ஆட்டம் போட்டு தன்னை இன்னும் இளமையாக காட்டி கொள்கிறார் தளபதி விஜய்.

டான்ஸ் & காமெடி: விஜய்யிடம் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விஷயம் அவருடைய நடனம் தான். உடலை வில்லாக வளைத்து, புது ஸ்டெப்புகளை கூட எளிதாக ஆட கூடியவர். சமீபத்தில் ‘அரபிக்குத்து’ பாடல் ஒட்டுமொத்த இந்தியாவை ஆட செய்தது. அதே நேரத்தில் தான் ஒரு பெரிய ஹீரோ என அலட்டி கொள்ளாமல் காமெடி காட்சிகளில் இறங்கி துவம்சம் செய்து விடுவார்.

Also Read:பாசமா வளத்தானா பச்சைக்கிளி, கொத்திட்டு போச்சாம் வெட்டுக்கிளி.. விஜய்யின் லியோவால் கடுப்பில் இருக்கும் பெரும் முதலாளி

Trending News