வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நாற்பது நாளில் பல நூறு கோடிக்கு வெளிவேஷம் போடும் அப்பா மகன்.. தளபதியின் ராஜதந்திரம்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் ஒரு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் அவருடைய 68 ஆவது படத்தின் அறிவிப்புகள் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி, அனிருத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு மங்காத்தா மற்றும் மாநாடு திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் படங்கள் , ஆனால் அவருடைய கடைசி இரண்டு படங்களான மன்மத லீலை மற்றும் கஸ்டடி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இப்படி தோல்வி வரிசையில் இருக்கும் வெங்கட் பிரபுவுக்கு விஜய் அடுத்த பட வாய்ப்பு கொடுத்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களுக்கும் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read:விஜய் பட இயக்குனரை நம்பி மோசம் போன வாரிசு.. மனவேதனையில் தவித்து வாடும் அப்பா நடிகர்

ஆனால் தளபதி விஜய் இந்த 68 ஆவது படத்தின் மூலம் மிக நேர்த்தியாக காய் நகர்த்தி இருக்கிறார். இந்த படத்திற்கு 200 கோடி சம்பளமாக வாங்க இருக்கிறார். மேலும் படத்தை 40 நாட்களுக்குள் முடித்து விட வேண்டும் என்று வெங்கட் பிரபுவிடம் நிபந்தனை போட்டு இருக்கிறார். படம் எப்படி இருந்தாலும் தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுத்து விடுவார் என்பது எல்லாருக்கும் தெரிந்து ஒன்றுதான். நடிகர் விஜய் 40 நாளில் 200 கோடியையும் அசால்டாக சம்பாதித்து விடுவார்.

விஜய் அடுத்தடுத்து அரசியல் நகர்வுகளை நகர்த்த இருக்கிறார். அதற்கான திட்டமிடலுக்குத்தான் இந்த 200 கோடி. தளபதி விஜய் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையின் ஈடுபட்டு வருகிறார். எப்படியும் பாராளுமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Also Read:அஜித்தின் அந்த படம் மாதிரி சஸ்பென்ஸ், திரில்லர் வேணும்.. விஜய் கண்டிஷனுக்கு தலையாட்டிய வெங்கட் பிரபு

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் மிகப்பெரிய கனவாக இருந்தது. அதற்காக அவர் செய்த முயற்சிகளால் தான் விஜய் அவரை ஒதுக்கி வைத்திருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் எந்த காரணத்திற்காக தன் தந்தையை ஒதுக்கி விட்டார் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அதே அரசியலில் தான் தீவிர கவனம் காட்டி வருகிறார். இது எல்லோருக்குமே அதிர்ச்சி தரும் விஷயமாகத்தான் இருக்கிறது. உண்மையிலேயே விஜய் அவருடைய அப்பாவை ஒதுக்கி விட்டாரா அல்லது அரசியலுக்காக போடும் வெளிவேஷமா என்ற சந்தேகம் தற்போது அனைவரது மனதிலும் எழுந்திருக்கிறது.

Also Read:அசுர வளர்ச்சியில் தளபதி.. பிகில் முதல் தளபதி 68 வரை வாங்கிய சம்பளம், ரைடு மட்டும் போய்டாதீங்க சார்

Trending News