திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மொத்த ஆர்டிஸ்டையும் செலக்ட் பண்ணிய தளபதி 68.. அரசல் புரசலா வந்ததுக்கே வெங்கட் பிரபுவை வெளுத்து விட்ட விஜய்

Thalapthy 68 updates: தளபதி விஜய் லியோ படத்தின் வேலைகள் முடித்த கையோடு அடுத்து அவருடைய 68 வது படத்தின் வேலைகளில் பணியாற்ற இருக்கிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. விஜய் இதுவரை பணியாற்றிய இயக்குனர்களில் இருந்து வெங்கட் பிரபு ரொம்பவே மாறுபட்ட ஒரு கேரக்டர். அவருடன் நடிக்கும் நடிகர்களாக இருக்கட்டும், படக்குழுவாக இருக்கட்டும் எப்போதுமே பயங்கர ஜாலியாக இருக்கக்கூடிய பேர் வழிகள்.

ஆனால் தளபதி விஜய்க்கு அது போன்ற யூனிட் செட்டாக வாய்ப்பில்லை. விஜய் சினிமாவை கொஞ்சம் சீரியஸாக பார்க்கக்கூடியவர். மாஸ்டர் திரைப்படத்தின் போது லோகேஷ் கனகராஜ் சீன் பேப்பரில்லாமல் காட்சிகள் எடுத்த பொழுது, அதுவே செட்டாகாமல் அவருடைய பாணிக்கு லோகேஷை மாற்றியவர் தான் தளபதி. அப்படி இருக்கும் பட்சத்தில் வெங்கட் பிரபுவின் ரூட்டுக்கு தளபதி செல்வதற்கு வாய்ப்பே இல்லை.

Also Read:ரோலக்ஸ் மாதிரி அடுத்த ரத்தக் கலரியான ஹீரோவை களம் இறக்கிய லோகேஷ்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே

லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதால், தளபதி 68 படத்தின் எந்த ஒரு செய்திகளும் லியோவின் ஹைப்பை குறைத்து விடக்கூடாது என்பதில் விஜய் ரொம்பவே உறுதியாக இருக்கிறார். இதனாலேயே வெங்கட் பிரபு இந்த படத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களிலும், மீடியாக்களிலும் வாயை திறக்காமல் இருக்கிறார். இதற்கு மிக முக்கிய காரணம் விஜய் போட்டிருக்கும் நிபந்தனை தான்.

மேலும் விஜய் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு பயங்கர சர்ப்ரைஸாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடியவர் தான் தளபதி. அப்படி இருக்கும் பட்சத்தில் தளபதி 68 படத்தில் நடிகை ஜோதிகா முக்கியமான ரோலில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ட்ரெண்ட் ஆகிவிட்டது. இதனால் விஜய் கடும் அப்செட் ஆகிவிட்டார். லியோ பட வேலைகளில் இருந்த விஜய் வெங்கட் பிரபுவை தொடர்பு கொண்டு வருத்தெடுத்து இருக்கிறார்.

Also Read:விஜய்யிடம் காரை பரிசாக வாங்கிய 4 பிரபலங்கள்.. ஓடாத படத்திற்கு இவ்வளவு பில்டப் தேவையா தளபதி

வெங்கட் பிரபுவின் யூனிட்டில் இருக்கும் ஆறு பேர் கொண்ட ஆர்டிஸ்ட் டிஸ்கஷன் குழுவுக்கு ஸ்ட்ரிட்டாக கட்டளை போடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஆறு பேரும் ஹவுஸ் அரெஸ்ட்டில் தான் வேலை செய்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. தளபதி 68 படத்திற்கான ஆர்டிஸ்ட் டிஸ்கஷன் மொத்தமும் முடிந்து, எல்லா கேரக்டரும் செலக்ட் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் போட்ட நிபந்தனையால் இப்போதைக்கு படக்குழு கப்சிப்பென்று இருக்கிறார்கள்.

தற்போதைய தகவலின்படி ஜூலை 15க்கு பிறகு தளபதி 68 படத்தின் ஆர்டிஸ்ட்கள் பற்றி செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியாக யோசிக்காமல் வெங்கட் பிரபுவின் படத்திற்கு ஓகே சொன்ன தளபதி, தற்போது ஒட்டுமொத்த டீமையும் கட்டுக்குள் வைக்க படாதபாடு பட்டு வருவது போல் தெரிகிறது. விஷயத்தை புரிந்து கொண்ட வெங்கட் பிரபு தற்போது சைலன்ட் மோடில் மெயின்டைன் பண்ணி வருகிறார்.

Also Read:சூப்பர் ஹீரோ கதையை நம்பி மோசம் போன 5 ஹீரோக்கள்.. விஜய் விக்ரமுக்கும் இதே நிலைமைதான்!

Trending News