சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலான படங்களுக்கு ஒரு இசையமைப்பாளர் தான் இருப்பார் என அனைவரும் அறிந்ததே. ஆனால் சில படங்களில் இரண்டு இசையமைப்பாளர்களும் அடிக்கடி பணியாற்றுவது.
அப்படி சமீபத்தில் தமிழில் வெளியான சுல்தான் படத்தில் பாடல்களை விவேக்-மெர்வின் என்பவர்களும், பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜாவும் இசை அமைத்திருந்தனர். இதில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தற்போது தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து இந்த முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடைசியாக பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படத்திற்கும் இரண்டு இசையமைப்பாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
அதேபோல் தற்போது பிரபாஸ் நடிக்கும் ராதேஷ்யாம் படத்திலும் இரண்டு இசையமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் பணியாற்ற உள்ளனர்.
தற்போது தெலுங்கு சினிமாவில் டாப் இசையமைப்பாளர்கள் ஆக இருக்கும் தேவிஸ்ரீ பிரசாத் மற்றும் தமன் ஆகிய இருவரும் இணைந்து மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்திற்கு இணைந்து இசையமைக்க உள்ளனர்.
இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த அளவைகுண்டபுரம்லோ என்ற பிரமாண்ட படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
