திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் தமன்.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா

ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் தமன். பாய்ஸ் படத்தில் நடித்த 5 இளைஞர்களில் ஒருவராக இசைக்கருவிகளை வாசிப்பவராக தமன் நடித்திருந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் இசையமைத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக பல ஹீரோக்களின் படங்களில் இசையமைத்து தற்போது தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையும், பல படங்களும் கைவசம் வைத்துள்ளார்.

தற்போது வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய்யின் 66 வது படத்தில் தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ஒரு பேட்டியில் அஜித்துடன் ஒரு படம் பண்ண ஆவலுடன் இருப்பதாகவும், அஜித் எனக்கு மிகவும் பிடித்த நபர் என தமன் கூறியிருந்தார்.

தமன் தற்போது ஒரு படத்திற்கு 2.5 கோடியிலிருந்து 3.5 கோடிவரை சம்பளம் வாங்குகிறார். இது தமனுக்கு மட்டுமல்லாமல் அவருடன் வேலை பார்க்கும் சவுண்ட் இன்ஜினியர், மிக்ஸ் இன்ஜினியர், இன்ஸ்ட்ரூமென்ட் பிளேயர்ஸ் ஆகியோருக்கும் சேர்த்து வாங்குகிறார்.

தமன், ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகி பின்பு, ஷங்கர் தயாரித்த ஈரம் படத்தில் முதல்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் ராம்சரண் படத்தில் தமன் இசையமைக்கிறார்.

இந்திய அளவில் புகழ்பெற்ற புட்ட பொம்மா பாடலுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தளபதி 66 படத்திற்கு செம ஹிட்டான பாடல்களை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர். டாப் நடிகைகள், அறிமுக நடிகர்கள் வாங்கும் சம்பளத்துக்கு நிகராக இசை அமைப்பாளர் சம்பளம் வாங்குகிறார் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.

Trending News