வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

குணச்சித்திரம் காமெடி என இரண்டிலும் மின்னிய தம்பி ராமையாவின் 6 படங்கள்.. 50 வயதிலும் சாதித்த நடிகர்

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமைகளைக் கொண்டு விளங்கியவர் தான் தம்பி ராமையா. இவர் தற்பொழுது படங்களில் குணச்சித்திரம் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதிலும் தனது 50 வயதிற்கு மேல் நடித்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அப்படி  இவரின் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த 6 படங்களை இங்கு காணலாம்.

மைனா: இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் மற்றும் காதல் கலந்த திரைப்படம் தான் மைனா. இப்படத்தில் விதார்த், அமலாபால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் தம்பி ராமையா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும் ஹீரோவுடன் இவர் அடிக்கும் லூட்டி அல்டிமேட் ஆக இருக்கும். படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. அது மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. 

Also Read: உடல் அசைவிலேயே நகைச்சுவையை தூண்டும் 5 காமெடியன்கள்.. யாருக்குமே யாரும் சளைத்தவர் அல்ல

வினோதய சித்தம்: இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படமாகும். இதில் தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் படம் முழுவதிலும் சமுத்திரக்கனி உடன் இணைந்து காமெடி, சென்டிமென்ட் என அனைத்திலும் புகுந்து விளையாடி இருப்பார்.

கும்கி: இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் லிங்குசாமி தயாரிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கும்கி. இதில் விக்ரம் பிரபு உடன் லட்சுமிமேனன் இணைந்து நடித்துள்ளார். மலைவாழ் கிராமங்களில் அட்டூழியம் செய்யும் யானையினை வைத்து இந்த படமானது எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தம்பி ராமையா, விக்ரம் பிரபுவின் மாமாவாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

Also Read: காடுகளை மையப்படுத்தி உருவான 5 படங்கள்.. விக்ரம் பிரபுக்கு பிள்ளையார்சுழி போட்ட கும்கி

அப்பா: 2012 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து நடித்த திரைப்படம் ஆகும். இதில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்திலும், தம்பி ராமையா குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தில் சிங்கப்பெருமாள் என்னும் கதாபாத்திரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியராக நடித்துள்ளார்.

கொம்பன்: 2015 ஆம் ஆண்டு இயக்குனர் எம் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கொம்பன். இதில் கார்த்தியுடன் லட்சுமிமேனன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவின் மாமன் கதாபாத்திரத்தில் தனது காமெடி கலந்த சென்டிமென்ட் காட்சிகளில் நடித்ததன் மூலம் அடித்து தூள் கிளப்பி இருப்பார்.

விஸ்வாசம்: இயக்குனர் சிவா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஒரு அதிரடி திரைப்படம் ஆகும். இதில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் அஜித் உடன் ரோசாமணி என்னும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் தனது அல்டிமேட் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: ரேஸில் எப்போதுமே நாங்க தான் ஃபர்ஸ்ட்.. 7 வருடத்திற்கு முன்பே ரஜினி, கமலை பின்னுக்கு தள்ளிய அஜித்

Trending News