சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அர்ஜுனுக்கு திருப்பி அடிக்கும் கர்மா.. தம்பியை தத்தியாக்கி ஆணவத்தில் ஆடும் தமிழ்!

Thamizhum Saraswathiyum serial update, Tamil scolds brother in anger: விஜய் டிவியில் பரபரப்பாக போய்க்கொண்டிருந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்போதுதான் படிப்படியாக அமைதி திரும்ப குடும்பத்தினர் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இந்த குடும்பத்தை அர்ஜுனும் நிம்மதியாக இருக்க விட மாட்டான்! காலமும் நிம்மதியாக இருக்க விடாது என்பது போல் புயல் மறைந்த வேகத்தில் பூகம்பம் கிளம்பியுள்ளது.

ஜெயிலில் இருந்து திரும்பிய சரஸ்வதி தன்னை ஆசுவாசிபடுத்திக் கொண்டு குழந்தை, படிப்பு என தன் சிந்தனையை திருப்ப, தேர்வும் வந்தாகிவிட்டது. மாமனார் மாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு தேர்வுக்கு செல்ல தயாராக இருக்கிறார் சரஸ்வதி .

இந்த நேரத்தில் தமிழுக்கு போன் வரவே, யார் என்று பார்த்தால் இவர்களிடம் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஆர்டரை கேன்சல் செய்த கம்பெனிக்காரர் தமிழை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். மறு வார்த்தை பேசாது தமிழும் ஓகே சொல்லிவிட்டு தம்பி கார்த்தி உடன் கிளம்புகிறார்.

Also read:  ஸ்ரீலங்காவில் பிறந்து தமிழ் சினிமால கொடிகட்டி பறந்த 5 பிரபலங்கள்.. தமிழகத்தை திருப்பி போட்ட நம்ம வீட்டு பிள்ளை

வாடிக்கையாளரின் கம்பெனியில் மேனேஜரை சந்தித்து பேச, அவரோ நடந்த விஷயங்களை அறிந்து வேதனைப்படுவதாகவும், தாங்கள் செய்த தவறுக்கு மன்னிக்கும் படியும் தமிழிடம் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் பக்கத்தில் இருந்த கார்த்தியோ முடிந்த அளவுக்கு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் எதிரே இருந்த மேனேஜரை தாக்கி பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயம் பார்த்து அர்ஜுன் உள்ளே வர எங்களுக்கு ஆர்டர் தாங்க என்று கெஞ்சுகிறார்கள். தமிழ் எங்கள் ஆர்டர கெடுக்க தான் வந்திருக்கிறானா? என்று அவரிடமும் சண்டை போடுகிறார்கள். இறுதியாக அர்ஜுன் செய்த கோல்மால் தனத்தினால் அவர்களிடம் ஆர்டரை கேன்சர் செய்து அதை தமிழுக்கு கொடுத்து விடுகின்றனர் கம்பெனிக்காரர்கள். வெறி கொண்ட வேங்கையாக வன்மத்தோடு கிளம்புகிறார் அர்ஜூன்.

எல்லாம் நல்லாத்தான போயிட்டு இருக்குன்னு நினைக்கும் போது குறித்த நேரத்தில் ஆர்டர் டெலிவரி செய்ய முடியாததால் கம்பெனிக்காரன் தமிழுக்கு போன் பண்ணி திட்ட, அந்த கோபத்தை தொழிலாளர்கள் அனைவரின் முன்னாடியும், தம்பியை கண்ணா பின்னாவென்று திட்டி தீர்த்து விடுகிறார் தமிழ். இந்தப் பிரச்சனை வீட்டிலும் எதிரொலிக்கிறது. அடுத்து நிகழப்போவது என்ன? என்ற சுவாரஸ்யத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.

Also read: 6 படங்களை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவி.. மணிரத்தினத்துக்கே குட் பாய் சொன்ன மலர்

Trending News