ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மணிகண்டனை ஓரம் கட்டி கலக்கிய தனலட்சுமி.. ஓவர் நைட்டில் ட்ரெண்டான சம்பவம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று ஆட்டம் பாட்டத்துடன் பயங்கர ரகளையாக இருந்தது. இந்த வாரம் பிக் பாஸில் டான்ஸ் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சவால் விட்டு தங்கள் நடந்த திறமையை நிரூபிக்கின்றனர்.

அந்த வகையில் நேற்று மணிகண்டன் மற்றும் தனலட்சுமி இருவரும் போட்ட குத்தாட்டம் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. புதுப்பேட்டை படத்தில் வரும் வரியா பாடலுக்கு இருவரும் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு ஆடினார். அதிலும் தனலட்சுமி சினேகாவுக்கு போட்டியாக இறங்கி குத்தாட்டம் போட்டது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

Also read:பிக்பாஸ் சீசன் 6 ஆண் போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம்.. முதல் இடத்தில் இருக்கும் பிரபலம்

புடவையை வரிந்து கட்டிக்கொண்டு கொஞ்சம் கூட கூச்சப்படாமல் அவர் ஆடியது பலருக்கும் எதிர்பாராத அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதிலும் நன்றாக ஆடக்கூடிய மணிகண்டனே திணறி போகும் அளவுக்கு அவருடைய பர்பாமன்ஸ் இருந்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் அவர்கள் இருவரில் யாருடைய டான்ஸ் பிடித்திருந்தது என்பதை ஹவுஸ் மேட்ஸ் இணைந்து தெரிவிக்க வேண்டும் என்று பிக் பாஸ் கூறினார். அதில் மணிகண்டனை விட தனலட்சுமிக்கு தான் அதிக ஓட்டு கிடைத்தது. அதனால் அவர் இந்த போட்டியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

Also read:பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த முதல் காதல்.. 2 பேருக்கு ரூட் போடும் சக போட்டியாளர்

கடந்த சில நாட்களாகவே தனலட்சுமியின் நடவடிக்கை ரசிகர்களுக்கு மிகுந்த வெறுப்பை கொடுத்து வந்தது. அதனால் இந்த வாரம் அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று தனலட்சுமியின் அபாரமான நடன திறமை ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது.

அந்த வகையில் நேற்று இரவில் இருந்தே அவர்தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாக மாறி இருக்கிறார். பல திறமைகள் இருந்தும் அதை வெளிப்படுத்தாமல் தேவையில்லாமல் கோபப்பட்டு வெறுப்பை சம்பாதித்து விட்டார். இருப்பினும் இனிவரும் நாட்களில் அவருடைய நடவடிக்கைகள் ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read:பிக்பாஸ்- 6 முதல்வார நாமினேஷன் லிஸ்ட் ரெடி.. வெளியேறும் சிடு மூஞ்சி போட்டியாளர்

Trending News