வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இந்த ரெண்டு பேரு என்ன கிழிச்சிட்டாங்கன்னு உள்ள வச்சிருக்கீங்க பிக்பாஸ்.. அநியாயமாக வெளியேற்றப்பட்ட தனலட்சுமி!

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பெரும் விவாதமாக மாறி வருகிறது. அதிலும் தற்போது நடந்த எலிமினேஷனுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவரை ரசிகர்கள் எதிர்பார்த்த பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். அவை அனைத்திற்கும் ஆதரவு கொடுத்து வந்த ஆடியன்ஸ் இந்த வார எலிமினேஷனை பார்த்து விஜய் டிவியை கண்டபடி திட்டி வருகின்றனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ஜனனி வெளியேறிய நிலையில் இந்த வாரம் டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி வெளியேறி இருக்கிறார். இதுதான் ரசிகர்களின் கடும் கோபத்துக்கு காரணமாக இருக்கிறது. உண்மையில் பிக் பாஸ் வீட்டில் உபயோகமில்லாத பொருட்களாக நிறைய போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

Also read: பிக் பாஸில் தனலட்சுமி வாங்கிய சம்பளம்.. கொடுத்த கன்டென்ட்டுக்கு கம்மிதான்!

அதிலும் மைனா நந்தினி, கதிரவன், மணிகண்டன் ஆகியோருக்கு பெரிய அளவில் வரவேற்பு எதுவும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த தனலட்சுமி எதற்காக வெளியேற்றப்பட வேண்டும் என கேள்வி குரல்கள் எழுந்து வருகிறது. சொல்லப் போனால் இறுதி போட்டியில் பங்கேற்க தகுதியான ஒரு போட்டியாளராக தான் தனலட்சுமி பார்க்கப்பட்டார்.

மேலும் நிகழ்ச்சியில் இவருடைய அதிரடி விளையாட்டு பலருக்கும் பிடிக்கும். எதற்கும் பயப்படாமல் போட்டி போடுவது, சண்டையிடுவது என்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக கன்டென்ட் கொடுத்தவரும் இவர்தான். அப்படிப்பட்ட கடுமையான போட்டியாளரை விஜய் டிவி திட்டமிட்டே வெளியேற்றியுள்ளதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

Also read: திட்டம் போட்டு எலிமினேஷனை நடத்தும் விஜய் டிவி.. பிக் பாஸில் போடும் ஓட்டு எல்லாமே வேஸ்ட் தானா?

அது மட்டுமல்லாமல் இந்த வாரம் மைனா நந்தினி தான் நிச்சயம் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் விஜய் டிவியின் முக்கிய பிரபலம் என்பதால் தான் சேனல் நிர்வாகம் அவரை காப்பாற்றி இருக்கிறது. அதற்கு பலியாடாக தனலட்சுமி மாட்டியிருக்கிறார் என அவருடைய ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன மைனா நந்தினி இந்த வாரமாவது வெளியேற வேண்டும் என்றும் அவரை நிகழ்ச்சியில் பார்க்கும்போது வெறுப்பும், எரிச்சலும் கிளம்புகிறது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் மைனா நந்தினி இன்னும் சில நாட்களுக்கு பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்று தெரிகிறது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டு வரும் டாஸ்க்குகள் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்த நிலையில் போட்டியாளர்களின் குடும்பங்களின் வருகையாவது சுவாரஸ்யத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: மன்னாதி மன்னர்களும் மண்ணை கவ்விய வரலாறு உண்டு.. கோமாளி அசீமை கதறவிட்ட தரமான சம்பவம்

Trending News