ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கதாநாயகி போல் வளர்ந்த தங்க மீன்கள் செல்லம்மா..ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராம் தங்க மீன்கள் படத்தை இயக்கி, நடித்திருந்தார். தங்க மீன்கள் படத்தை கௌதம் மேனன் தயாரித்திருந்தார். இப்படம் தயாராகி நீண்ட நாள் ஆகியும் கௌதம் மேனனின் நிதி நெருக்கடியால் வெளியாகாமல் இருந்தது. பின்பு ஜே.எஸ்.கே சதீஷ் தங்கமீன்கள் படத்தை வாங்கி வெளியிட்டார்.

இப்படத்தில் மகளின் மீது அதீத பாசம் கொண்ட தந்தையாக இயக்குனர் ராம் நடித்திருந்தார். தந்தை மீதுள்ள அளவற்ற பாசத்தால், தந்தையின் பணப் பிரச்சினைகளுக்கு தானே காரணம் என்று நினைத்து குளத்தில் மூழ்கி தங்கமீனாய் மாறவும் தயாராக இருந்தாள் மகள் செல்லம்மா.

செல்லம்மா கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் சாதனா. இவருடைய தத்ரூபமான நடிப்பால் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றார். இப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது, கே வி பிலிம் இன்ஸ்டியூட் சிறந்த குழந்தை நட்சத்திர விருது என பல விருந்துகளை இப்படத்திற்காக சாதனா பெற்றார்.

sadhana-thangameengal-01
sadhana-thangameengal-01

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாதனா தற்போது படங்களில் ஹீரோயின் ஆகும் அளவிற்கு வளர்ந்து உள்ளார். சென்னையில் பிறந்த சாதனா தற்போது மும்பையில் வசித்து வருகிறார். சாதனா பாடல் மற்றும் நடனத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவர்.

தங்கமீன்கள் படத்திற்கு பிறகு ராம் இயக்கிய பேரன்பு படத்தில் மம்முட்டியுடன் இணைந்து சாதனா நடித்திருந்தார். சமீபத்தில் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வைஜெயந்திமாலா மற்றும் பத்மினி இருவரும் நடனம் ஆடிய கண்ணும் கண்ணும் கலந்து பாடலில் மறு உருவாக்கம் செய்து புதிய முயற்சியாக இரு வேடங்களிலும் சாதனாவை நடனமாடி ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

Trending News