திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மாளவிகாக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் டீம்.. மொத்தமாய் உருமாறி இணையத்தை கலக்கும் புகைப்படம்

Malavika Mohanan: கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நடிகை மாளவிகா மோகனுக்கு தமிழில் முதல் பட வாய்ப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்டை படத்தில் கிடைத்தது. வசீகரமான முகம், சிக்கென்று இருக்கும் உடலமைப்பு என முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் இவர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு இரண்டாவது படத்திலேயே கிடைத்தது. மாஸ்டர் படத்தில் அந்த அளவுக்கு இவருக்கு முக்கியத்துவம் இல்லாததால் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார். அதன் பின்னர் நடிகர் தனுஷ் நடித்த மாறன் படத்திலும் நடித்திருந்தார்.

Also Read:அவதார் போல டிமான்டி காலனியில் இத்தனை பாகங்களா.? புதுவிதமான ஹாரர், நெஞ்சை பதற வைத்த இயக்குனர் ஞானமுத்து

தற்போது மாளவிகா மோகனன், இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் தங்கலான் படத்தில் நடிக்கிறார். இந்தப் படமும் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படக்கூடிய ஒன்று. மேலும் இந்த படத்திற்காக இவர் நிறைய தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ஆகஸ்ட் 4ஆம் தேதியான இன்று மாளவிகா தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படக்குழு தங்கலான் படத்தின் லுக் மற்றும் அவருடைய கேரக்டர் பெயரையும் வெளியிட்டு மாளவிகாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது. இந்தப் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.

                                                     தங்கலான் பட லுக்கில் மாளவிகா மோகனன்

இந்தப் புகைப்படத்தில் மாளவிகா பழங்காலத்து அணிகலன்கள் அணிந்து கையில் கம்பு மற்றும் வேலுடன் இருப்பது போல் இருக்கிறது. புகைப்படத்திற்கு பின்னால் நெருப்புப் பொறிகள் பறப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டோவை பார்க்கும் பொழுது பழங்குடியின பெண்ணை சித்தரித்து இருப்பது போல் தெரிகிறது. மேலும் அவருடைய கேரக்டர் பெயர் ஆரத்தி எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சுதந்திரத்திற்கு முன்பான இந்தியாவில் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்த இந்தியர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை தான் தங்கலான் என ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக வெளியான விக்ரமின் புகைப்படத்திலும் அவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் போல் தான் தெரிந்தார். தற்போது மாளவிகாவின் புகைப்படம் அப்படித்தான் இருக்கிறது.

Also Read:கங்குவா-விற்கு முன் சூப்பர் ஹிட் படத்தை வைத்து வசூலை அள்ளும் சூர்யா.. 500 தியேட்டர்களில் ரீ ரிலீஸ்

Trending News