தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் பா. ரஞ்சித். தொடர்ச்சியாக சமூக நீதி பேசும் படங்களை இயக்கி வரும் இவரது இயக்கத்தில் கடைசியாக ‘தங்கலான்’ ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், சமூகத்தில் பல விவாதங்களையும் ஏற்படுத்தியது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விக்ரம், பா. ரஞ்சித் கூட்டணியில் ‘தங்கலான்’ படம் உருவானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கப்பட்டது. விக்ரம், பா. ரஞ்சித் இருவரின் கெரியரிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பொருட் செலவில் இப்படம் உருவானது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘தங்கலான்’. விக்ரமுடன் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார்.
திடீரென பாய்ந்த வழக்கு
தங்களின் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்து மாஸ் காட்டியது. இந்த நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதியே திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருந்தாலும் இன்னமும் ஓடிடியில் வெளியிடப்படவில்லை. இதனால் இப்படத்தின் ஓடிடி ரிலீசுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தற்போது என்னவென்றால், தங்கலான்’ படத்தை ஓடிடியில் வெளியிட தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். ‘புத்த மதம் குறித்து புனிதமாகவும், வைணவம் பற்றி நகைச்சுவையாக சித்தரிக்கும் விதமாகவும் படத்தில் காட்சிகள் உள்ளன.
இதனால் ‘தங்கலான்’ ஓடிடியில் வெளியானால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டு மனுதாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ஒருபக்கம் netflix மண்டைக்குடைத்தல் கொண்டிருக்கிறது. தற்போது என்னவென்றால் ஒரு பெண்மணி வழக்கு தொடுத்திருக்கிறார். ஏன் இவருக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறதோ..