Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதபடி வீட்டுக்கு வந்த மருமகள்கள் ஐம்பதாவது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக நடத்தி மாமனார் மனதை குளிர் வைத்து விட்டார்கள். அத்துடன் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமாக இந்த நாளை கொண்டாடி விட்டார்கள்.
இதற்கு முக்கிய காரணமாக இருந்த தங்கமயிலுக்கு நன்றி சொல்லும் விதமாக சரவணன் ஓவராக புகழ ஆரம்பித்து விட்டார். பிறகு பாண்டியன், சரவணன் மற்றும் தங்கமயில் கல்யாணத்தை பதிவு பண்ணுவதற்காக ஆதார் அட்டை வேணும் என்று தங்கமயில் இடம் கேட்டு விட்டார். கேட்டதிலிருந்து தங்கமயில் பதட்டம் அடைய ஆரம்பித்து விட்டார். ஏனென்றால் சரவணனை விட வயசு மூத்தவர் ர என்கிற விஷயம் தெரிந்து விடும் என்ற பயம்.
பாண்டியனை சமாளிக்க மறுபடியும் பொய் சொல்லும் தங்கமயில்
இந்த பயத்தினால் தங்கமயில் அவருடைய அம்மாவுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லுகிறார். உடனே பாக்கியம், இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை நீயே சமாளித்துக்கொள் என்று சொல்லிப் போனை வைத்து விடுகிறார். அடுத்து பதிவு பண்ணுவதற்காக பாண்டியன், தங்கமயில் இடம் ஆதார் அட்டையை எடுத்துட்டு வரச் சொல்கிறார்.
என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் தட்டு தடுமாறிய தங்கமயில் கடைசியாக ஆதார் அட்டை என்னிடம் இல்லை. என் அம்மா வீட்டில் இருக்கிறது என்று பொய் சொல்கிறார். உடனே பாண்டியன் சரி போகும்போது எடுத்துட்டு போகலாம் என்று சொல்கிறார். ஆனால் தங்கமயில் வீட்டில் யாரும் இல்லை நான் இன்னொரு நாள் எடுத்து தருகிறேன் என்று பொய் சொல்லி சமாளிக்கிறார்.
இதை எல்லாம் பார்த்த மீனா, ஏற்கனவே இந்த குடும்பத்தின் மீது சந்தேகம் இருந்ததால் தற்போது தங்கமயிலின் நடவடிக்கையும் பேச்சையும் பார்க்கும் பொழுது இன்னும் அதிகமாக சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. ஆனாலும் இந்த விஷயத்தை யாரிடம் சொன்னாலும் நம்ப மாட்டார்கள் என்பதற்காக வேடிக்கை மட்டும் பார்க்கிறார்.
இதற்கிடையில் ராஜி, டியூஷன் விஷயத்தை மாமாவிடம் பேசிட்டீங்களா என்று கோமதியை அதட்டி பயமுறுத்தி பிளாக்மெயில் பண்ணி கேட்கிறார். ஆனால் கோமதி, இதைப்பற்றி பேசினால் மாமா ரொம்ப கோவப்படுவாங்க. அதனால் என்னால் பேச முடியவில்லை என்று சாந்தமாக பதிலளிக்கிறார். ஆனாலும் விடாப்பிடியாக ராஜி, கோமதியை டார்ச்சர் செய்கிறார்.
இதையெல்லாம் கவனித்த கதிர், நீ என்ன எங்க அம்மாவை மிரட்டி கிட்டு இருக்க என்று சொல்லி நியாயம் கேட்கிறார். அதற்கு ராஜி எனக்கும் என் மாமியாருக்கும் நிறைய விஷயங்கள் இருக்கும் நீ இதுல தலையிட வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு கடைசியாக நீங்க என்ன பண்ணுவீங்க எனக்கு தெரியாது. இன்னைக்கு உள்ள மாமாவிடம் எனக்கு டியூஷன் எடுப்பதற்கு பெர்மிஷன் வாங்கி கொடுக்கணும் என்று ஓவராக அராஜகம் பண்ணி பேசி விட்டார்.
இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் கோமதி தடுமாறிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்த மீனா நான் இந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்று உஷாராக விலகி விட்டார். ஏனென்றால் எந்த பிரச்சனை நடந்தாலும் மீனா மீது தான் விழுகிறது என்று பாண்டியன் ரொம்ப கோபப்படுகிறார் என்பதற்காக உஷாராகி விட்டார். ஆனாலும் ராஜி நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்பதற்கு ஏற்ப டியூஷன் எடுப்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- Pandian Stores 2: பாண்டியன் குடும்பத்திற்கு கவச குண்டலமாக இருக்கும் மீனா
- Pandian Stores 2: தனத்துக்கே டஃப் கொடுக்கும் பாண்டியனின் மருமகள்
- கதிர் மீது பாசத்தை கொட்டும் பாண்டியன்