திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அப்பாவை காப்பாற்ற பாண்டியனிடம் தங்கமயில் சொல்லப் போகும் உண்மை.. பெரிய ஏமாற்றத்தில் நிற்கும் சரவணன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்வாங்க. ஆனால் தங்கமயில் குடும்பத்தில் இருப்பவர்கள் ஆயிரம் பொய் சொல்லி இருப்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் மாட்டிக் கொள்வோமே என்று தவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் மகளின் வாழ்க்கையை காப்பாற்ற மாணிக்கம் எடுத்த அதிரடி முடிவு யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருக்கும் போலி நகையையும் சர்டிபிகேட்டையும் எடுத்து விட்டால் பிரச்சனை எல்லாம் சரி செய்யலாம் என்று பிளான் பண்ணி விட்டார்.

ஆனால் எப்பொழுதுமே ஒரு வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு போக வேண்டும் என்றால் அதற்கு குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தால் நாம் தான் மாட்டிக் கொள்வோம். பிரச்சனை நம்மை விட்டு போகாதே என்பதற்கு சரியான உதாரணமாக தங்கமயிலின் அப்பா மாணிக்கம் தற்போது மாட்டிக்கொண்டார்.

பாண்டியன் குடும்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக முத்துவேல் வீட்டுக்கு பின்னாடி ஒளிந்து கொண்டார். ஆனால் அவர்கள் கண்டுபிடித்து வைத்த நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து விசாரிப்பதற்கு போலீசை வர வைத்து விட்டார்கள். இதற்கு இடையில் தங்கமயில், அப்பாக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டாரா என்று பாக்கியத்துக்கு போன் பண்ணி கேட்கிறார்.

ஆனால் பாக்கியம், அப்பா எதிர்த்த வீட்டில் மாட்டிக்கொண்டார் என்று சொல்லிய நிலையில் நான் எப்படியும் கூட்டிட்டு வந்து விடுவேன் என்று சமாளித்து போனை கட் பண்ணி விடுகிறார். பிறகு கணவரை தேடி பாக்கியம் இரவு நேரத்தில் அலைந்து கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் கதிர் ஆஃபர் முடித்துவிட்டு காரில் வரும் பொழுது அத்தை என்று கூப்பிட்டு விசாரிக்கிறார். அப்பொழுது பாக்கியம், தங்க மயிலின் அப்பாவை காணும் அவரை தேடித்தான் நான் அழைக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு கதிர், இந்த நேரத்தில் நீங்கள் எங்கே போய் தேடுவீர்கள்.

காலையில் வந்து விடுவார் அப்படி இல்லை என்றால் நான் தேடிப் பிடித்து கூட்டி வருகிறேன். நான் இப்பொழுது உங்களை வீட்டில் விடுகிறேன் என்று சொல்லி பாக்கியத்தை தங்கமயில் வீட்டில் விட்டு விடுகிறார். பிறகு கதிர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் தூணில் கட்டி போட்டு இருந்த தங்கமயில் அப்பாவை பார்த்து விடுகிறார்.

உடனே மாமா என்று கதிர் கூப்பிட்டு காப்பாற்ற போகிறார். கதிரின் சத்தத்தை கேட்டதும் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வெளியே வந்து பார்க்கிறார்கள். அங்கே சம்மந்தியை பார்த்ததும் பாண்டியன் அதிர்ச்சியாக நின்ற நிலையில் தங்கமயில் பதட்டத்துடன் அப்பா என்று கூப்பிட்டு பேசுகிறார்.

அப்பொழுது சக்திவேல், உன் வீட்டு சம்மந்தி என் வீட்டிற்கு திருட வந்திருக்கிறார் என்று வாய்க்கு வந்தபடி பேசிய நிலையில் தங்கமயில் அப்பா நான் திருட வரவில்லை என்று சொல்லிப் பார்க்கிறார். ஆனால் முத்துவேல் வீட்டில் யாரும் கேட்காததால் போலீஸ் விசாரணை பண்ணுவதற்கு வந்து விட்டார்கள். இந்த சூழ்நிலையில் அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தங்கமயில் நான் படிக்கவில்லை.

அதனால் சர்டிபிகேட்டை காணும் என்று சொல்வதற்காக என் அப்பா எடுத்துட்டு போக வந்தார்கள் என்று உண்மையை சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்படி மட்டும் சொல்லிவிட்டால் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்கமயிலை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது சரவணன் என்ன முடிவு எடுப்பார் என்பது பரபரப்பாக இருக்கிறது. இல்லையென்றால் தங்கமயிலின் அப்பாவை காப்பாற்ற கதிர் ஏதாவது பொய் சொல்லி பிரச்சினையை சரி செய்வாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News