புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Pandian Stores 2: தங்கமயில் சரவணன் கல்யாணத்தில் ராஜிக்கு பிறந்த விடிவு காலம்.. ஒரு வழியா பாண்டியன் மச்சானுக்கு ரூட் கிளியர் ஆயிட்டு

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று ஒரு சொலவடை உண்டு. அது மாதிரி தங்கமயிலின் அம்மா பாக்கியம் பாண்டியன் குடும்பத்தை ஏமாற்றி பொய்யா சொல்லி ஒரு கல்யாணத்தை முடிக்கப் போகிறார். ஆனால் கொஞ்சம் கூட சந்தேகமே படாத அளவிற்கு பாண்டியன் இந்த அளவுக்கு ஏமாறப்போகிறார் என்பது தான் பாவமாக இருக்கிறது.

ஏனென்றால் வெறும் பொய் சொன்னால் மட்டும் பரவாயில்லை. சதி வேலையும் செய்து அந்த குடும்பத்தில் ஏதாவது ஏழரை இழுக்கும் அளவிற்கு தங்கமயிலுக்கு ட்ரெய்னிங் கொடுத்து வருகிறார். இதெல்லாம் எங்க போய் முடியப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் தங்கமயில் சரவணன் கல்யாணத்தை ரசிக்கும் படியான இன்னொரு விஷயம் அரங்கேற்றி வருகிறது.

ராஜி பின்னாடியே சுற்றும் கதிர்

அதாவது ராஜி சுறுசுறுப்பாக ஒவ்வொரு வேலையாக பார்த்துக் கொண்டு வருகிறார். இதை கவனித்த கதிர் என்ன தன்னுடைய பொண்டாட்டி இப்படி ஓய்வே எடுக்காமல் வேலை பார்த்து வருகிறாரே என்று கவலைப்பட ஆரம்பித்து விட்டார். அதனால் ராஜி பின்னாடியே கதிர் சுற்றி வருகிறார்.

பிறகு ராஜியை பார்த்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. எல்லா வேலையும் ஏன் நீனே இழுத்து போட்டு பார்க்கிறாய் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் கோமதி வந்து மறுபடியும் ராஜிக்கு வேலை கொடுக்கிறார். பிறகு அதை செய்து விட்டு வந்தபின் மறுபடியும் கதிர் ராஜிடம் ஜூஸ் கொடுத்து அப்பப்போ உன்னையும் பார்த்துக்கோ என்று ரொம்பவே அக்கறையாக பேசுகிறார்.

இதெல்லாம் பார்த்து மீனா நடக்கட்டும் நடக்கட்டும் என்பதற்கு ஏற்ப ரியாக்ஷன் கொடுத்துட்டு போகிறார். ஆக மொத்தத்தில் தங்கமயில் சரவணன் கல்யாணத்தில் ராஜிக்கு ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது என்றே சொல்லலாம். ஏனென்றால் அப்பா அம்மா ஆதரவுமில்லை கட்டிட்டு வந்த புருஷனும் கண்டுக்கவில்லை என்று இரண்டு கிட்ட நிலைமையில் இருந்தார்.

ஆனால் தற்போது கதிர் மொத்த அன்பையும் காட்டி ராஜியை தன் பொண்டாட்டி என்பதற்கு ஏற்ப ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பாண்டியன் வீட்டோட இருக்கும் மச்சானுக்கு அடுத்து கிளியர் ரூட் ஆகிவிட்டது. எப்பொழுதுதான் எனக்கு கல்யாணம் நடக்கும் என்று ஏக்கத்துடன் இருக்கும் பழனிவேலுக்கு அடுத்து பொண்ணு பார்க்கும் விஷயம் ஏகபோகமாக நடக்கப்போகிறது.

Trending News