Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி தன்னுடைய கணவர் கதிர் கஷ்டப்படுவதில் பாதி பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் டியூஷன் எடுத்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து படிக்கலாம் என நினைக்கிறார். அந்த வகையில் ராஜி சித்தப்பா பழனிச்சாமிடம் உதவி கேட்டு டியூஷன் படிக்கும் பசங்களை வீட்டிற்கு கூட்டிட்டு வரவைத்து விட்டார்.
ஆனால் ராஜி டியூஷன் எடுப்பது தங்கமயிலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏனென்றால் தங்கமயில் எப்பொழுது ஃப்ரீயாக இருப்பாரோ அப்பொழுது நீங்களும் எனக்கு உதவிக்கு வர வேண்டும் என்று ராஜி கூப்பிட்டு இருக்கிறார். இதனால் தங்கமயில் படிக்கவில்லை என்று அனைவருக்கும் தெரிந்து விடும் என்ற பயத்தில் இருக்கிறார்.
ஓவராக ஆட்டம் போடும் தங்கமயில்
இதையெல்லாம் தாண்டி ராஜி டியூஷன் எடுக்க தயாராகி விட்டார். ஆனால் மாமனார் பாண்டியனிடம் எதுவும் சொல்லாமல் அப்புறம் சொல்லிக்கலாம் என்ற அசட்டு தைரியத்தில் டியூஷன் எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பக்கமாக எதேர்ச்சியாக வந்த தங்கமயிலை பார்த்து ராஜி டியூஷனுக்கு உதவும் படி கூப்பிடுகிறார்.
இதை சமாளிக்க முடியாமல் தங்கமயில் அம்மா போன் பண்ணுகிறார்கள் பேசிவிட்டு வருகிறேன் என்று உள்ளே எஸ்கேப் ஆகி போய்விட்டார். உள்ளே போன தங்கமயில் உடனே அம்மா பாக்கியத்திற்கு கால் பண்ணுகிறார். என்னை படித்த பொண்ணு என்று பெருமையாக எல்லோரிடமும் சொல்லிவிட்டாய். ஆனால் இப்பொழுது நான் தான் இங்கே அவஸ்தப்படுகிறேன் என்று புலம்புகிறார்.
உடனே நடந்த விஷயத்தை தங்கமயில், அம்மாவிடம் சொல்கிறார். அதற்கு தங்கமயிலின் அம்மா, ராஜி டியூஷன் எடுப்பதை மாமனார் பாண்டியனிடம் வேண்டா வெறுப்பாக போட்டுக் கொடுத்து விடு. இப்படி எல்லாம் பண்ணினால் குடும்பத்துக்கு கெட்ட பெயர் தான் வரும் என்று ஐடியா கொடுக்கிறார்.
அதன்படி வீட்டுக்கு வரும் பாண்டியன் இடம் தங்கமயில் பேசி ராஜி டியூஷன் எடுப்பதற்கு ஆப்பு வைத்து விடுகிறார். பாண்டியனும் தங்கமயில் சொல்வது தான் கரெக்ட் என்று முடிவெடுத்து ராஜியை டியூஷன் எடுக்க வேண்டாம் என்று சொல்கிறார். காரணம் ராஜி அப்பா அம்மாவிற்கு தெரிந்தால் ஏதோ இந்த பணத்தை வைத்து தான் பாண்டியன் பிழைக்கிறான் என்று அவப்பெயர் வந்துவிடும் என்று தங்கமயில் கோர்த்து விட்டார்.
இதை யோசித்த பாண்டியனும் ராஜி டியூஷன் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனைத் தொடர்ந்து பாண்டியன் கடையிலிருந்து வீட்டுக்கு வந்ததும் பணப்பையை வழக்கம்போல் கோமதி இடம் கொடுக்கிறார். ஆனால் அதை அடாவடியாக தங்கமயில் வாங்கி விடுகிறார். இவருடைய எண்ணம் எப்படியாவது அந்த வீட்டு நிர்வாகத்தை கையில் எடுக்க வேண்டும் என்பதுதான்.
அதனால் கூடிய விரைவில் கோமதியை செல்லா காசாக ஆக்கி பாண்டியனிடமிருந்து பொறுப்புகள் அனைத்தையும் பெற்றுக் கொள்வார். இந்த தங்கமயிலின் உண்மையான முகம் தெரியாத வரை பாண்டியன் இந்த குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் தங்கமயில் தான் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருப்பார்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த முந்தைய சம்பவங்கள்
- ஒரு வழியா பாண்டியன் மச்சானுக்கு ரூட் கிளியர் ஆயிட்டு
- கடுப்பான கோமதி, அக்கப்போர் பண்ணும் பாண்டியன்
- மாமனாரை குறை சொல்லும் தங்கமயில்