வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

Pandian Stores 2: பாண்டியன் தலையில் இடியை இறக்கிய தங்கமயில்.. ராஜி மீனாவிற்கு ஏற்பட போகும் அவமானம்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவின் அம்மா, மகளை பார்ப்பதற்காக கோமதி வீட்டிற்கு வருகிறார். அவர் வரும்பொழுது மீனாவின் தலையில் கோமதி என்னை தேய்த்துக்கொண்டு ராஜி கையை பிடித்து அமிக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து சந்தோஷத்தில் மீனாவின் அம்மா நிற்கிறார்.

பிறகு அம்மாவை பார்த்து சந்தோஷத்தில் மீனா அம்மாவுடன் போய் பேசுகிறார். அப்பொழுது கோமதி வாங்க சம்மந்தி என்று வீட்டிற்குள் கூப்பிடுகிறார். அதற்கு மீனாவின் அம்மா இன்னும் பழசு எதுவுமே மாறவில்லை. சகஜமாக பேசக்கூடிய நேரமும் வரவில்லை என்று கூறி மீனாவிற்காக வாங்கி வைத்த நகையை கொடுக்க வந்தேன் என நகை பாக்சை மீனாவிடம் கொடுக்கிறார்.

இதை வாங்கிய மீனா நீ கொண்டு வந்திருக்கிறது அப்பாவுக்கு தெரியுமா என்று கேட்கிறார். அதற்கு மீனாவின் அம்மா தெரியாது என்று பதில் சொல்கிறார். உடனே மீனா அப்படி என்றால் எனக்கு இந்த நகை வேண்டாம் என்று சொல்கிறார். அப்பொழுது மீனாவின் அம்மா ஒன்னும் பிரச்சனையாகாது. உங்கள் வீட்டில் இப்பொழுது கல்யாண நிகழ்ச்சி வைத்திருக்கிறார்கள்.

பித்தலாட்ட குடும்பத்தில் சம்பந்தப்பட்ட பாண்டியன்

அந்த நேரத்தில் நீ நகை இல்லாமல் வெறும் கழுத்தாக இருந்தால் அது நன்றாக இருக்காது என்று தான் கொடுத்திருக்கிறேன். அதனால் நீ வாங்கிக்கொள் சந்தோஷமாக இரு என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பிறகு மீனா வீட்டிற்குள் நுழைந்து அனைத்து நகைகளையும் கோமதி மற்றும் ராஜிடம் காட்டி சந்தோசம் அடைகிறார்.

இதனை தொடர்ந்து பாண்டியன் கல்யாணத்துக்காக குடும்பத்துடன் சேர்ந்து டிரஸ் எடுக்க போவதற்கு பிளான் பண்ணிவிட்டார். ஆனால் ஒவ்வொருவருடைய டிரஸ்ஸும் எந்த பட்ஜெட்டில் இருக்க வேண்டும் என்று வீட்டில் வைத்து கூறிவிட்டார். அதன்படி எல்லாரும் நகை கடைக்கு போய் விட்டார்கள்.

இதே மாதிரி சரவணனுக்கு பார்த்து வைத்திருக்கும் தங்கமயிலின் குடும்பமும் நகை கடைக்கு கிளம்பி விட்டார்கள். ஆனால் போவதற்கு முன் தங்கமயில் இடம் அவருடைய அம்மா உன் இஷ்டப்படி புடவையை எவ்வளவு ரூபாய்க்கு வேண்டானாலும் வாங்கிக் கொள். இந்த கல்யாணம் நம்ம இஷ்டப்படி நடக்க வேண்டும். எல்லாத்துக்கும் தலை ஆட்ட முடியாது என்று மகளுக்கு பல தில்லாலங்கடி வேலையை சொல்லி வீட்டில் இருந்து கூட்டிட்டு போகிறார்.

அதன்படி நகை கடையில் அனைவரும் சந்தித்த நிலையில் தங்கமயில் இருக்கிறதுலையே அதிகமான காசுக்கு புடவையை தேர்ந்தெடுக்கப் போகிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாண்டியனுக்கு பெரிய இடியாக விழப்போகிறது. பிறகு மற்றவர்கள் யாருக்கும் டிரஸ் எடுக்க முடியாத அளவிற்கு அனைத்து பணத்தையும் தங்கமயில் குடும்பத்திற்கு மட்டுமே செலவு பண்ண போகிறார். அந்த இடத்தில் மீனா மற்றும் ராஜி அவமானத்தில் நிற்கப் போகிறார்கள்.

Trending News