திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

பாண்டியனை ஏமாற்ற ட்ராமாவை ஆரம்பித்த தங்கமயிலு.. சாயம் வெளுக்காமல் இருக்க அம்மா கொடுத்த ஐடியா

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணன் மற்றும் தங்கமயில் கல்யாணம் பாண்டியன் எதிர்பார்த்தபடி நடந்து முடிந்து விட்டது. இதனை அடுத்து மருமகளாக காலடி எடுத்து வைத்த தங்கமயிலுக்கு நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் அனைத்தும் முறைப்படி நடத்துகிறார்கள்.

கிடைக்கிற கேப்பில் கெடா வெட்டனும் என்று சொல்வதற்கு ஏற்ப கதிர் ராஜி மற்றும் செந்தில் மீனா அவர்களுடைய காதல் ரொமான்ஸும் பூத்துக்குலுங்கி விட்டது. இதற்கிடையில் தங்கமயில் அம்மா பாக்கியம் மகளுக்கு போன் பண்ணி புகுந்த வீட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் உன் பேச்சை கேட்கும் படி ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்தில் வைத்துக் கொள்.

குடும்பத்திற்கு தூபம் போடும் தங்கமயில்

அத்துடன் புருஷனையும் உன் கைக்குள் போட்டு, நீ சொல்றத எல்லாரும் கேட்கிற மாதிரி வச்சுக்கோ என்று ஐடியா கொடுக்கிறார். அது மட்டும் இல்லாமல் கவரிங் செயின் போட்டதை பற்றி நீ எதுவும் கவலைப்படாத. அதையெல்லாம் சமாளித்துக் கொள்ளலாம். நீ எப்படி அந்த வீட்டில் இருப்பவர்களை கவுக்க வேண்டும் என்பதை மட்டும் பார்த்து செய் அது போதும் என்று சொல்கிறார்.

அது மட்டும் இல்லாமல் நீதான் அங்கே முறைப்படி கல்யாணம் பண்ணிட்டு போன மருமகள். அதனால் உனக்கு தான் முதலில் அனைத்து அதிகாரமும் உரிமையும் உண்டு. அந்த கெத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்துக்கோ. மேலும் மீனாவின் ஆட்டம் அங்கே ஓவராக இருக்கிறது அதனால் அவரையும் அடக்கி வை என்று தங்க மயிலுக்கு பல தில்லாலங்கடி வேலையை சொல்லிக் கொடுக்கிறார்.

இதை கேட்டு தங்க மயிலும் தலையை ஆட்டிக்கொண்டு கிடைக்கிற கேப்பில் எல்லாம் ராஜி மீனா வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிட்டு வந்ததை குத்தி காட்டி பேசுகிறார். பிறகு பாண்டியன், சரவணனிடம் குடும்பம் என்றால் என்ன என்று பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த கதிர் இப்போதைக்கு சரவணனை அப்பா விடப் போவதில்லை என்று மாமாவிடம் சொல்லி எப்படியாவது அனுப்பி வையுங்கள் என்று கூறுகிறார்.

பிறகு ஒரு வழியாக சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து காலையில் மீனா, ராஜி, கோமதி அனைவரும் அடுப்பாங்கரையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது. தங்கமயில் பக்தி மயமாக பூஜை புனஸ்காரம் என்று சாமி பாடல்களை போட்டு சாம்பிராணி போட்டு அனைவரை மனதிலும் இடம் பிடிக்க தூபம் போடுகிறார்.

இதையெல்லாம் பார்த்து வழக்கம் போல் பாண்டியன் மற்றும் கோமதி நாங்கள் பார்த்த மருமகள் போல வருமா என்று பெருமை கொள்ளப் போகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இப்பொழுது அப்பா என்ன சொன்னாலும் தலையாட்டி கொண்டிருக்கும் சரவணன் கொஞ்சம் கொஞ்சமாக பொண்டாட்டி என்ன சொன்னாலும் சரிதான் என்று தலையாட்டும் சோளக்காட்டு பொம்மையாக மாறப் போகிறார். அதன் பிறகு தான் பாண்டியன் குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆப்பு இருக்கு.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Trending News