ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அஜித்தை தாறுமாறாய் பேசி வம்புக்கு இழுத்த தங்கர்பச்சான்.. கோடி சம்பாதிச்சும் நல்ல மனசு இல்ல

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படத்தை பற்றிய பேச்சு தான் இப்போது அதிகமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த அந்த படத்தின் டிரைலரை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். மேலும் அந்த படம் வாரிசுக்கு சரியான போட்டியாக இருக்கும் என்றும் விஜய்க்கு பயத்தை காட்டிவிட்டது என்றும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்கர் பச்சான் அஜித் குறித்து பேசி இருக்கும் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என்ற பன்முக திறமையுடன் இருக்கும் தங்கர் பச்சான் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் அஜித்தின் காதல் கோட்டை, வான்மதி போன்ற திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்.

Also read: புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடிய அஜித்தின் புகைப்படங்கள்.. ஷாலினுக்கு டஃப் கொடுக்கும் மகள்

அந்த வகையில் அவரிடம் ஒரு பேட்டியில் அஜித் பற்றி கேட்கப்பட்டது. அதில் டென்ஷனான அவர் அஜித்தை பற்றி எதற்காக என்னிடம் கேட்கிறீர்கள், அவர்தான் வேற்று கிரகத்தில் இருப்பது போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். படத்தில் நடித்து கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கும் அவர் அது எங்கிருந்து வருகிறது என்பதை ஒரு முறையாவது யோசித்துப் பார்க்க வேண்டும்.

மேலும் கஷ்டப்பட்டு பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை அவர் சந்திப்பதில்லை. படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்வதில்லை, படத்தில் உழைப்பை போடும் சாமானிய மக்களையும் அவர் சந்திப்பதில்லை. ஆனால் அதன் மூலம் சம்பாதிக்கும் பணம் மட்டும் வேண்டும். இப்படி எல்லாம் சம்பாதிக்கும் பணத்திற்கு பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்பதை அவர் யோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Also read: துணிவிற்கு தன் வாயாலே விளம்பரம் செய்த தளபதி.. சத்தமில்லாமல் சந்தோசப்பட்டு வரும் அஜித்

தற்போது அவருடைய இந்த பேட்டி வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் அஜித்தை பற்றி எதுவுமே தெரியாமல் எப்படி நீங்கள் அவரை குறை சொல்லலாம் என்று அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் சாமானிய மக்கள் கூட அஜித்துடன் நெருங்கும் அளவிற்கு தான் அவர் அனைவரிடமும் பழகி வருகிறார்.

மேலும் கடந்த வருடம் அவர் துணிவு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஓய்வு நேரங்களில் பைக்கிலேயே இந்தியாவை சுற்றியது பலருக்கும் தெரியும். அப்போது அவரை சந்தித்த அனைவரிடமும் அவர் இன்முகமாக பழகியதும், போட்டோ எடுத்துக் கொண்டதும் சோசியல் மீடியாவையே கலக்கியது. இப்படி மக்களில் ஒருவராக இருக்கும் அவரை தங்கர்பச்சான் தேவையில்லாமல் எதற்கு வம்பு இழுக்க வேண்டும் என ரசிகர்கள் கொதித்துப் போய் இருக்கின்றனர்.

Also read: வெளிநாடுகளில் வசூல் வேட்டையாடிய விஜய்.. ரிலீசுக்கு முன்பே துணிவை விட 2 மடங்கு கல்லா கட்டிய வாரிசு

Trending News