சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மேடையில் பகிரங்கமாக எச்சரித்த தங்கர்பச்சான்.. ஜாதி சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்

Thangarbachan and Mari selvarj: பொதுவாக ஒரு கருத்தை மக்களிடம் ஈசியாக கொண்டு போய் சேர்க்கும் என்றால் அது சினிமாவாகத் தான் இருக்க முடியும். அந்த வகையில் சில இயக்குனர்கள் தன் பட்ட கஷ்டங்களையும், அவமானங்களையும் இனி வரும் சந்ததிகள் படக்கூடாது என்பதற்காக ஒரு விழிப்புணர்வு படமாக ஜாதியை வைத்து சமீப காலமாக இயக்கிக் கொண்டு வருகிறார்கள்.

இந்த விஷயங்கள் என்னதான் ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பலரும் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தங்கர்பச்சான் சமீபத்தில் சேரன் இயக்கி நடித்த “தமிழ்க்குடிமகன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பொழுது பகிரங்கமாக அவருடைய கருத்துக்களை மேடையில் தெறிக்க விட்டிருக்கிறார்.

Also read: அஜித்தை தாறுமாறாய் பேசி வம்புக்கு இழுத்த தங்கர்பச்சான்.. கோடி சம்பாதிச்சும் நல்ல மனசு இல்ல

அதாவது வெறும் வலிகளை சொல்லக்கூடிய படங்களை தாண்டி, இது தப்பு என்று உணரும் வகையில் சமூகத்தை இணைக்கிற மாதிரியான காட்சிகளை கொண்டு வாருங்கள். மக்களும் ஒரு நல்ல படத்திற்கு ஆதரவு கொடுங்கள் கண்ட கண்ட படங்களை தயவு செய்து புறக்கணித்து விடுங்கள் என்று அவருடைய ஆதங்கத்தை கூறி இருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாரி செல்வராஜ் பேசி இருக்கிறார். அதாவது இதனுடைய ஆழமும் வேதனையும் தெரிந்தவர்கள் அமைதியாக நீந்த வேண்டியதாக இருக்கிறது. ஆழம் அதிகமாக இருக்கிறது என்று என்னால் திரும்பிப் போக முடியாது அதில் நீச்சல் அடித்தால் மட்டுமே என்னால் பயணிக்க முடியும்.

Also read: உதயநிதி, மாரி செல்வராஜ் எல்லாம் ஒன்றுமே இல்லை.. கொடி பறக்க செய்து ருத்ர தாண்டவம் ஆடிய வசூல் வேட்டை

அதனால் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் என்னுடைய நோக்கம் படைப்பின் மூலம் கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்று கூறி இருக்கிறார். இந்த மாதிரி ஜாதி படங்கள் இப்போ தேவையா என்று கேட்டால் நிச்சயமாக எங்கேயோ இது ஒரு மூலையில் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு போய் சேர வேண்டும் என்பதற்காகத் தான் நான் என் படைப்பை கொடுத்து வருகிறேன்.

மேலும் என்னுடைய படைப்புக்கு தொடர்ந்து ஆதரவு, எதிர்ப்பு மற்றும் ஆக்ரோஷங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதன் மூலம் நான் அடுத்த கட்ட மாற்றத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்று அமைதியாக இருந்து தெளிவுபடுத்த நினைக்கிறேன். கண்டிப்பாக என்னுடைய முயற்சி, வாழ்வாதாரத்தை மேம்படுத்த நினைக்கும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் என்ற நம்பிக்கையில் நான் பயணத்தை மேற்கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.

Also read: சக்திவேலா, ரத்னவேலா.? சாதிய வெறியை தூண்டிய மாரி செல்வராஜ், மாமன்னன் பற்ற வைத்த நெருப்பு

Trending News