தமிழ் சினிமாவில் முன்ணணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தல தளபதி தான். பல்வேறு இயக்குனர்களும் இவர்களுக்காக கதை தயார் செய்த வண்ணமே இருப்பர். எனினும் எல்லாப் படங்களையும் ஒப்புக்கொண்டு கால்ஷீட் கொடுக்கும் அளவிற்கு இவர்களிடம் நேரம் இருப்பதில்லை இருவரும் வருடத்திற்கு ஒரு படம் என்கிற முறையில் பயணப்படுகிறார்கள்.
இப்படியாக இருக்க தளபதி விஜயை மனதில் வைத்து இயக்குனரும் ஜெயம் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா ஒரு கதையை முதல் முறையாக எழுதியிருந்தார். இதுபற்றி பேசுவதற்காக தளபதியை அனுகவே தளபதியோ கதை நன்றாக உள்ளது இதனை ஜெயம் ரவியே நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார். தளபதி கூறியதை அப்படியே மறுக்காம் அப்ளே செய்தார் இயக்குனர் மோகன் ராஜா.
வில்லனுக்கான தேடலில் அர்ஜுன் அரவிந்சாமி இர்ஃபான் என பட்டியலிட்டிருந்தவருக்கு அரவிந்சாமி ஒப்புக்கொள்ளவே வரமாக அமைந்தது படம். 2015-ல் ஜெயம் ரவி நயன்தாரா அரவிந்த்சாமி தம்பி ராமையா நாசர் நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் ஜெயம் ரவிக்கு மேலும் ஒரு மகுடமாய் அமைந்தது.

யுவன் தமன் இமான் என்ற இசையமைப்பாளர் தேடலில் ஹிப்ஹாப் தமிழாவுக்கு அடித்தது யோகம் இப்படத்திற்கான அனைத்து பாடல்களும் அவரே எழுதி இசையமைத்தார் தீமை தான் வெல்லும் பாடலுக்காக அரவிந்த்சாமியின் குரல் இன்னும் ஒரு மாஸ் கொடுத்தது.
இப்படத்தை முதலில் தயாரிக்க திட்டமிட்ட சன்பிக்சர்ஸ் ஜெயம் ரவியின் கடந்த தோல்விகளுக்காக தயாரிப்பிலிருந்து பின்வாங்கியது. கல்பாத்தி அகோரம் தயாரித்த இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வாங்கியது சன் டிவி.
இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரனும் வில்லன் ரோலில் அரவிந்த்சாமியும் நடித்திருந்தனர். மேலும் பெங்காலி இந்தி என இப்படத்திற்கான ரீமேக் எல்லாப்பக்கமும் ஹிட் கொடுத்தது. இப்போது இதன் இரண்டாம் பாகம் குறித்த பேச்சு எழுந்துள்ளது விரைவில் அதற்கான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.