செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தேவையில்லாத பிரச்சனையை கிளப்பி வெற்றிமாறனை சிக்க வைத்த தாணு..ரெட் கார்டு வரை சென்ற சம்பவம்

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தை தயாரித்துள்ளார். செல்வராகவன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. அதைத்தொடர்ந்து தாணு, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தையும் தயாரிக்கிறார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தாணு கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து மேல் தயாரிப்பாளர் கவுன்சிலில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதாவது கோப்ரா படம் பல பல வருடங்கள் தாமதமாகி ரிலீஸ் ஆனதால் பட்ஜெட்டும் குறிப்பிட்டதை விட அதிகமாகி இருக்கிறது.

Also read:எகிறும் பட்ஜெட், ஒரு காட்சிக்கு 8 கோடி செலவு.. வேற லெவலில் உருவாகும் வெற்றிமாறனின் விடுதலை

தற்போது படமும் பெரிய அளவில் வெற்றி பெறாததால் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடுப்பான லலித் தயாரிப்பாளர் சங்கத்தில் இனிமேல் அஜய் ஞானமுத்து படம் இயக்கக் கூடாது, அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்க சென்று இருக்கிறார்.

ஆனால் அவருக்கு முன்பாகவே தாணு இந்த புகாரை கொடுத்துள்ளார். நியாயப்படி பார்த்தால் கோப்ரா படத்தின் புரொடியூசர் ஆன லலித் குமார் தான் புகாரை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு முன்பே தாணு புகார் கொடுத்திருப்பது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அவர் இப்படி செய்வதற்கு காரணம் வெற்றி மாறன் தான். அதாவது வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். அவருக்காக காத்திருந்த சூர்யாவும் வேறொரு திரைப்படத்தில் நடிக்க போய்விட்டார்.

Also read:கோப்ரா பட தோல்வியால் அஜய் ஞானமுத்துக்கு ஏற்பட்ட சிக்கல்.. பின்வாங்கி அடுத்த பட டாப் ஹீரோ

இதனால் வாடிவாசல் திரைப்படம் எப்போது தொடங்கும் என்று யாருக்கும் தெரியவில்லை. படம் இப்படி தாமதமாகி கொண்டே சென்றால் தயாரிப்பாளருக்கு நிச்சயம் நஷ்டம் ஏற்படும். அந்த வகையில் வாடிவாசல் படத்திற்கு கோப்ரா படத்திற்கு வந்த நிலைதான் ஏற்படும்.

அதனால்தான் தாணு வெற்றிமாறனுக்கு ஒரு பயத்தை காட்ட வேண்டும் என்று இப்படி ஒரு புகாரை கொடுத்திருக்கிறார். தற்போது அவர் நினைத்தது போலவே வெற்றிமாறனும் தாணுவை சந்தித்து விரைவில் வாடிவாசல் திரைப்படத்தை எடுத்து முடித்துவிடுகிறேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறாராம்.

Also read:20 நிமிடம் குறைத்தும் கல்லா கட்ட முடியாத கோப்ரா.. 2ம் நாள் வசூலை பார்த்து அதிர்ச்சியில் விக்ரம்

Trending News