வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அப்ப நிஜமாவே பாலா சைக்கோ தானா.? புது பஞ்சாயத்தை கூட்டிய தாரை தப்பட்டை நடிகர்

Director Bala: சர்ச்சைக்கென்று பெயர் போனவர் தான் இயக்குனர் பாலா. இவர் ஒரு படம் எடுக்கிறார் என்றாலே அதில் ஏதாவது ஒரு பஞ்சாயத்து இருக்கும். அப்படி தான் வணங்கான் படத்தில் சூர்யாவை படாத பாடுபடுத்தி அவர் ஆள விடு சாமி என ஓடும் அளவுக்கு இவர் செய்தார்.

அதை அடுத்து அப்படத்தில் நடித்த மமிதாவை இவர் அடித்ததாக கிளம்பிய பரபரப்பு இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்து இருக்கிறது. ஆனால் அதற்குள்ளாகவே மற்றொரு பஞ்சாயத்து வந்திருக்கிறது. ஆனால் இது சில வருடங்களுக்கு முன்பு நடந்த சமாச்சாரம்.

அதாவது பாலா கரகாட்ட கலையை மையப்படுத்தி தாரை தப்பட்டை என்ற படத்தை எடுத்திருந்தார். சசிகுமார், வரலட்சுமி ஆகியோருடன் விஜய் டிவி அமுதவாணன், ஆனந்தி உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருந்தனர். அதில் அமுதவாணனை பாலா முதன் முறையாக பார்க்கும் போது மிமிக்ரி செய்ய சொல்லி கேட்டாராம்.

Also read: பாலாவுக்கே அப்பன் நானு.. ஹீரோயினிடம் மிருக புத்தியை காட்டி ரெட் கார்டு வாங்கிய இயக்குனர்

அவரும் சூர்யா போல் பேசி இருக்கிறார். அப்போது அவர் எதார்த்தமாக மீசையை தடவியதை பார்த்த பாலா மறுநாள் மீசையில்லாமல் வரவேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். அதேபோல் ரஜினி ஸ்டைலில் பேசும்போது தலைமுடியில் கையை வைத்திருக்கிறார்.

உடனே பாலா அமுதவாணனை ஹேர் கட் செய்து செந்தில் போன்ற கெட்டப்பில் வரவேண்டும் என்று சொல்லிவிட்டாராம். இதனால் அதிர்ந்து போன அமுதவாணன் வேறு வழியில்லாமல் மீசையை எடுத்துவிட்டு தலைமுடியையும் கட் செய்து இருக்கிறார்.

இந்த செய்தி தான் இப்போது வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே பாலாவை சைக்கோ இயக்குனர் என்று கூறிவரும் நிலையில் இந்த செய்தி அதை உறுதிப்படுத்துவது போல் இருக்கிறது. மனுஷன் ஒருத்தரையும் விட மாட்டார் போல. அப்படி என்னதான் அவருக்கு பிரச்சனையோ தெரியலையே என இந்த விவகாரத்தை கேள்விப்பட்ட பலரும் குழம்பி தான் போகிறார்கள்.

Also read: பாலா சைக்கோ தனத்தின் உச்சம் தொட்ட 5 சம்பவங்கள்.. ஆர்யா அப்பாக்கு விழுந்த அடி

Trending News