வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

க்ரிஞ்ச் டிராமாவுக்கு தயாராகும் தர்ஷிகா.. பிக்பாஸ் வீட்டில் அடுத்த பூகம்பம், தப்பிப்பாரா விஷால்.?

Biggboss 8: நேற்றிலிருந்தே பிக்பாஸ் வீட்டில் விஷால் தலை தான் உருளுகிறது. ஐயா சாமி போதும் இதோட விட்டுடுங்க என அவர் கெஞ்சாத குறை தான்.

tharshika
tharshika

அந்த அளவுக்கு சொல்லி வைத்தது போல் வீட்டுக்குள் வந்த பழைய போட்டியாளர்கள் இவரை டார்கெட் செய்தனர். முதலில் சுனிதா முக்கோண காதல் என ஆரம்பித்தார்.

அதை அடுத்து அர்ணவ் சாச்சனா என ஒவ்வொருவரும் இவரை பிளேபாய் ரேஞ்சுக்கு பேசினார்கள். இதில் தர்ஷிகா வெளியேறியது இவரால் தான் என்ற பேச்சு சோசியல் மீடியாவிலும் அடிபட்டு வருகிறது.

க்ரிஞ்ச் டிராமாவுக்கு தயாராகும் தர்ஷிகா

அதற்கேற்றார் போல் வெளியில் வந்த தர்ஷிகா பல பேட்டிகள் கொடுத்து விஷால் பெயரை டேமேஜ் செய்து விட்டார். உண்மையில் இந்த லவ் ட்ராக் டிராமாவை ஆரம்பித்தது இவர்தான்.

எனக்கு லவ் இல்ல என்னை நம்பி ஏமாந்துறாத என விஷால் வெளிப்படையாகவே கூறினார். ஆனாலும் சோறு ஊட்டுவது கட்டிப்பிடிப்பது என எல்லை மீறியது தர்ஷிகா தான்.

ஆனால் தற்போது இவர் பாதிக்கப்பட்டது போல் ஒரு ட்வீட் போட்டு இருக்கிறார். அதில் எனக்காக யாரும் பிக்பாஸ் வீட்டில் பேச வேண்டாம்.

என்னுடைய எலிமினேஷனுக்கு நான்தான் காரணம். ஆனால் சம்பந்தப்பட்டவரிடம் இது குறித்து நான் நேரடியாகவே கேட்பேன். அதனால் யாரும் எனக்காக பேச வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து விஷாலை கிழிக்கப் போகிறார் என்பது தெரிகிறது. ஆனால் இந்த க்ரிஞ்ச் ட்ராமா எதற்காக.

இதை ஆரம்பித்ததே நீங்கதான். இப்போது நல்லவர் மாதிரி பேசினால் சரியாயிடுமா. இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது என சோசியல் மீடியாவில் இப்போது கருத்துக்கள் பரவிக் கொண்டிருக்கிறது.

Trending News