வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கொடுத்த காசுக்கு மேல் கூவும் ப்ளூ சட்டை மாறன்.. அடுத்த படத்திற்கு இப்பவே கவனிக்கும் நடிகர்

யூடியூபில் தனக்கென ஒரு சேனலை ஆரம்பித்து திரைப்படங்களை விமர்சனம் செய்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ அதில் இருக்கும் குறைகளை மட்டுமே கூறுவது தான் இவருடைய ஸ்டைல். இதனாலேயே இவரை முன்னணி நடிகர்களுடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டி தீர்ப்பார்கள்.

இவர் ஒரு திரைப்படத்தை நன்றாக இருக்கிறது என்று சொன்னாலே அது ஆச்சரியம்தான். அந்த வகையில் இவர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை நல்ல விதமாகவே விமர்சனம் செய்திருந்தார். பல திரைப்படங்களை தியேட்டரில் சென்று பார்க்காதீர்கள் என்று கூறும் ப்ளூ சட்டை திருச்சிற்றம்பலம் படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Also read: இறங்கி ஒரு சம்பவம் செய்யணும் தோணுது.. ப்ளூ சட்டை மாறனுடன் கடும் கோபத்தில் கௌதம் மேனன்

இதுவே பலருக்கும் நம்ப முடியாத அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் உண்மையில் அவரின் விமர்சனத்திற்கு பின்னால் சில சம்பவங்களும் இருக்கிறது. அதாவது தனுஷ் தரப்பில் இருந்து இவரை வெயிட்டாக கவனித்ததால் தான் இப்படி ஒரு விமர்சனத்தையே அவர் கொடுத்ததாக தற்போது ஒரு தகவல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் நானே வருவேன் திரைப்படத்திற்கும் இப்பவே அவர் சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகிறாராம். அதனால் தான் அவர் வாங்கிய காசுக்கு மேல் அந்த திரைப்படத்தை பற்றி கூவியதாக கூறுகின்றனர்.

Also read: சிம்புவை வச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்.. உருவ கேலிக்கு இப்படி ஒரு பதிலடியா?

ஒரு வகையில் அவருடைய விமர்சனமும் திருச்சிற்றம்பலம் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளதால் அடுத்த படத்திற்கும் அவரை நன்றாக விமர்சனம் செய்ய சொல்லி இப்பவே ஆர்டர் பறந்துள்ளதாம். ஏனென்றால் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் அப்போது வெளிவர இருப்பதால்தான் இந்த முன்னெச்சரிக்கையாம்.

மேலும் தனுசுக்காக இப்படி ஒரு வேலையை செய்வதால் தான் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை அவர் கண்டபடி விமர்சனம் செய்திருந்தாராம். ப்ளூ சட்டை மாறன் காசு வாங்கிக்கொண்டு இப்படி ஒரு வேலையை பார்த்த இந்த சம்பவம் தான் தற்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

Also read: வாரிசு படத்தையும் விட்டுவைக்காத ப்ளூ சட்டை.. 15 லட்சம் கொடுத்தும் அட்டை காப்பி அடிப்பீங்களா!

Trending News