புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பொண்டாட்டி கூட நடிக்க நம்பர் ஒன் சீரியலை விட்டு விலகிய கணவன்.. விஜய் டிவி துரத்திவிட்டும் அடங்கல

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி சோவுக்கு கிடைக்கும் வரவேற்பை விட சீரியல்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்துவதில் விஜய் டிவி ஆர்வம் காட்டி வருகிறது. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் அறிமுகமான ஒரு ஜோடி தற்போது வேற சேனலுக்கு மாறி இருக்கிறார்கள்.

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ், ஆலியா மானசா தற்போது நிஜ வாழ்விலும் ஜோடியாக மாறி இருக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு இப்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். முதல் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடிக்க வந்த ஆலியா கருவுற்ற காரணத்தால் அந்த சீரியலை விட்டு விலகினார்.

Also read: குழந்தையை வைத்து கேவலமான ஸ்கிரிப்ட் எழுதிய பாரதி கண்ணம்மா சீரியல்.. டிஆர்பிக்காக இப்படி எல்லாமா பண்ணுவீங்க!

தற்போது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ள அவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் அவர் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் இனியா என்ற சீரியலில் நாயகியாக களமிறங்கியுள்ளார். அதேபோன்று சஞ்சய் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வருகிறது. ஆனால் இப்போது அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்னவென்றால் சஞ்சீவ் இந்த சீரியலை விட்டு விலக இருக்கிறார். ஏனென்றால் அவர் தன் மனைவியுடன் சீரியலில் ஜோடியாக நடிக்க விரும்புகிறாராம்.

Also read: பாக்யாவை கதற விடும் வாரிசு.. ராதிகாவிற்கு எதிராக நடக்கும் கூட்டு சதி

அதனால் நன்றாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலை டீலில் விட்டுவிட்டு இனியா சீரியலில் நடிக்க சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஏற்கனவே விஜய் டிவியில் இப்படி ஒரு வேலையை பார்த்ததால்தான் அவர் சன் டிவிக்கு வந்தார். அங்கு இவர் நடித்து வந்த ஒரு சீரியலில் தன் மனைவியை தான் ஹீரோயினாக போட வேண்டும் என்று பிடிவாத பிடித்து இருக்கிறார்.

இதனால் விஜய் டிவிக்கும், அவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு இவர் சன் டிவி சீரியலில் நடிக்க வந்தார். தற்போது இங்கும் ஒரு பஞ்சாயத்தை அவர் கூட்டி இருப்பது சேனல் நிர்வாகத்திற்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. இப்படி போற இடமெல்லாம் அலப்பறையை கூட்டும் இவர்களை பற்றி தான் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also read: ஆலியா மானசா மட்டுமல்ல சூப்பர் ஹிட் இயக்குனரை வளைத்து போட்ட சன் டிவி.. விஜய் டிவியின் டிஆர்பிக்கு வச்ச பெரிய ஆப்பு

Trending News