வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சூப்பர் ஸ்டாருக்கு ஓகே சொல்லிட்டு கருப்பு கேப்டனுக்கு நோ.. விஜயகாந்தை அவமானப்படுத்திய நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சினிமாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ, அதே போன்று கேப்டன் விஜயகாந்த்துக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 80 காலகட்ட சினிமாவை ஆட்சி செய்த இரு பெரும் நடிகர்களுக்கு மத்தியில் விஜயகாந்தும் முன்னணி நடிகராக புகழ்பெற்றார்.

ஒரு வருடத்தில் பல திரைப்படங்களில் நடிக்கும் அளவுக்கு இவர் பிஸியான நடிகராக இருந்தார். அப்படிப்பட்ட இவரை ஒரு நடிகை அவமானப்படுத்தி இருக்கிறார். இயல்பாகவே விஜயகாந்த் சற்று நிறம் குறைவாக இருப்பார். ஆனால் அதுதான் அவருக்கு அழகு என்று ரசிகர்கள் கூறுவதுண்டு.

அதனாலேயே அவர் திரையுலகில் கருப்புத் தங்கம் என்று அழைக்கப்பட்டார். ஆனால் அந்த நிறத்தையே காரணம் காட்டி 80 களில் புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகை அவருடன் நடிக்க மறுத்துள்ளார். நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஒரு அசைக்க முடியாத இடத்தை பெற்றவர் தான் அந்த நடிகை.

அந்த காலகட்டத்தில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே நடிகையும் இவர்தான். திறமையான நடிகையாக இருந்தாலும், இவர் மீது அப்போது ஏகப்பட்ட புகார்கள் உண்டு. அதாவது கருப்பாக இருக்கும் நடிகர்களோடு அவர் நடிக்க மாட்டாராம். அப்படி ஜோடியாக நடிக்க ஓகே சொன்னாலும் அந்த நடிகரை தொட்டு, உரசி பேசுவது போன்ற நெருக்கமான காட்சிகள் இருக்கக் கூடாது என்று அவர் கண்டிஷன் போடுவாராம்.

இந்த காரணத்தால் தான் அவர் விஜயகாந்துடன் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் கடுப்பான கேப்டன் கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற ஒரு நடிகையை தனக்கு ஜோடியாக இரு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்தார்.

இப்படி கேப்டனுக்கு நோ சொன்ன அந்த நடிகை சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் ஓகே சொல்லி ஒரு படத்தில் நடித்திருக்கிறார். மாபெரும் வெற்றி பெற்ற அந்த திரைப்படத்தில் அவர்களின் ஜோடி பொருத்தமும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை எப்படி கருப்பாக இருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு ஓகே சொன்னார் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

என்னவென்றால் சூப்பர் ஸ்டார் புகழின் உச்சியில் இருக்கும் ஒரு நடிகர். அவர் நினைத்தால் அந்த நடிகையின் மார்க்கெட்டையே கூட காலி செய்துவிட முடியும். அதற்கு பயந்து தான் நடிகை அவருடன் ஜோடியாக நடித்ததாக கூறப்பட்டது. அதன் பிறகு அந்த நடிகை சில வருடங்களிலேயே சினிமா வேண்டாம் என்று ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

Trending News