கடந்த சில நாட்களாகவே திரையுலகில் அந்த இளம் நடிகையைப் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. லிவிங் ரிலேஷன்ஷிப் அதிகமாகிவிட்ட திரைத்துறையில் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரையில் கால் பதித்திருக்கும் அந்த நடிகையும் பிரபல நடிகருடன் ரகசிய உறவில் இருந்தார்.
வெப் தொடரில் நடித்த போது காதலின் விழுந்த அவர்கள் இருவரும் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் குடித்தனம் நடத்தி வந்தனர். ஏற்கனவே ஒரு நடிகையை காதலித்து கழட்டி விட்ட நடிகர் தற்போது சீரியல் நடிகையுடன் காதலில் விழுந்தது பலருக்கும் ஆச்சரியம் தான்.
Also read:விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட டாப் நடிகை.. சத்தம் இல்லாமல் நடக்கும் சிகிச்சை
யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கட்டி காத்து வந்த இந்த விஷயம் எப்படியோ மீடியாவில் கசிந்தது. அது மட்டுமல்லாமல் நடிகைகளின் அந்தரங்க உறவை பற்றி பேசி கல்லாகட்டி வரும் அந்த பிரபலமும் இந்த சீரியல் நடிகைக்கும், நடிகருக்கும் இருக்கும் உறவை பற்றி கண்டபடி பேசி இருந்தார்.
இதனால் அதிர்ச்சியான நடிகை அதில் உண்மை இல்லை என்று மறைமுகமாக ஒரு விளக்கம் அளித்தார். இதுதான் தற்போது முக்கிய செய்தியாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் அந்த வில்லங்கமான பிரபலம் குட்டு வெளிப்பட்டதால் தான் நடிகை, நடிகரை பிரிந்து விட்டதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இப்படி இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் நடிகர் மட்டும் எதையும் கண்டுகொள்ளாமல் கமுக்கமாக இருக்கிறாராம். ஏற்கனவே அவரின் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளும், கெட்ட பெயர்களும் இருக்கிறது. இந்நிலையில் தேவையில்லாமல் அந்த பிரபலத்திடம் வாய் கொடுக்க வேண்டாம் என்று அவர் அமைதியாக இருக்கிறாராம்.
அதே போன்று நடிகையும் இந்த விஷயத்தை தெளிவுபடுத்தாமல் நாசுக்காக பேசி இருப்பதும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. அவர் மேல் தப்பில்லை என்றால் சம்பந்தப்பட்ட அந்த பிரபலத்தை தைரியமாக கேள்வி கேட்க வேண்டியதுதானே, எதற்காக இந்த மழுப்பல் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.
Also read:15 வயது நடிகையை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன முரட்டு நடிகர்.. அம்மா, மகள் இருவருக்கும் டார்ச்சர்