திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

விருதுக்கு ஆசைப்பட்டு படாத பாடுபடும் 18 வயது இளம் நடிகை.. ஆறுதலுக்காக அரவணைத்த நடிகர்

அக்கட தேசத்தில் பிரபலமாக இருக்கும் அந்த இளம் நாயகிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னணி நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டி தற்போது கை நிறைய படங்களை வைத்துக் கொண்டிருக்கும் அந்த நாயகிக்கு 18 வயது தான் ஆகிறது.

இப்போது கோலிவுட்டில் மையம் கொண்டுள்ள அந்த புயலுக்கு தற்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம். ஆனாலும் அதை ஏற்க முடியாத ஒரு நிலையில் சிக்கி தவித்து வருகிறாராம் அந்த நடிகை. அதற்குக் காரணம் அந்த விருது இயக்குனர் தான் என்று கூறப்படுகிறது.

அந்த இயக்குனரின் படங்களில் நடிக்க வேண்டும் என்றாலே பல நடிகைகளும் எஸ்கேப் ஆகி விடுவார்கள். அந்த அளவுக்கு இயக்குனர் தத்ரூபமாக நடிக்க சொல்லி அனைவரையும் படாத பாடு படுத்தி விடுவார். இதையெல்லாம் கேள்விப்பட்டும் கூட அந்த இளம் நாயகி முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறோம் என்ற ஆர்வத்தில் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார்.

ஆரம்பத்தில் மற்றவர்கள் கூறியது போன்று இல்லாமல் அனைத்தும் சுமூகமாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் இடையில் இயக்குனருக்கும், நடிகருக்கும் இருந்த பிரச்சனையில் படப்பிடிப்பு ரொம்பவும் தாமதமாகி கொண்டே போவதால் நடிகை கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.

ஏனென்றால் நடிகை படத்திற்காக கொடுத்த தேதிகள் எப்பவோ முடிந்து விட்டதாம். ஆனாலும் இயக்குனர் படப்பிடிப்பை நீடித்துக் கொண்டே போவதால் நடிகைக்கு பல வாய்ப்புகளும் கைநழுவி போகிறதாம். இதை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார் அந்த நடிகை.

இதைப் பார்த்த படத்தின் ஹீரோ படம் வெளியானால் உங்கள் நடிப்பு பேசப்படும், ஏகப்பட்ட விருதுகளும் கிடைக்கும். அதனால் இந்த கஷ்டத்தை சமாளித்துக் கொள்ளுங்கள் என்று ஆறுதல் கூறியிருக்கிறாராம். இதனால் நடிகை தனக்கு எப்படியும் விருது கிடைத்துவிடும் என்று ஆறுதல் பட்டு கொண்டிருக்கிறாராம். விஷயம் தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கும் அந்த நடிகை பற்றி தான் தற்போது கோலிவுட்டில் ஒரே பேச்சாக இருக்கிறது.

Trending News