செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அந்தத் தவறினால் என் கேரியரே போச்சு.! திருந்திய மல்டி ரோல் நடிகை.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.

நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயர் வாங்கிய இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் நடிப்புக்கு முக்கியம் தரும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்கும் திறமை கொண்டவர். அந்த வகையில் சவரக்கத்தி திரைப்படத்தில் 3 குழந்தைகளுக்கு அம்மாவாக இயக்குனர் ராமுடன் இணைந்து நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து கொடிவீரன் திரைப்படத்தில் வில்லியாக நடித்து மிரட்டியிருப்பார். இந்தப் படத்திற்காக அவர் மொட்டையடித்து நடித்திருந்தார். அவருடைய இந்த தைரியமான நடிப்பு ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது.

இதுவரை பல படங்களில் வில்லி, குணச்சித்திரம் என்று அனைத்து கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்தவர் ஒரு சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

டிக் டாக் வீடியோ மூலம் பழக்கமான ஒருவர் பூர்ணாவை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்துள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த பேச்சு பாதியிலேயே முடிவடைந்தது.

அதன் பிறகுதான் நடிகை பூர்ணாவுக்கு தன்னுடன் பழகி வந்த நபர் தன்னுடைய பணத்திற்காக மட்டும் தான் பழகினார் என தெரியவந்துள்ளது. இது தவிர அவர் நிறைய பெண்களை பணத்திற்காக ஏமாற்றியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

சமீபத்தில் பூர்ணா ஒரு தயாரிப்பாளருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், பின்னர் அவரை விட்டு விலகியதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக பூர்ணா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தன் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு செய்ததாகவும் அதனால் தன் சினிமாவில் நிறைய வாய்ப்புகளை இழந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது இவர் தமிழில் பிசாசு2, அம்மாயி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் இது தவிர தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Trending News