நயன்தாரா சந்திக்காத பிரச்சனையே இல்லை என்று சொல்லலாம். சினிமாவுக்கு வந்த புதிதில் நயன்தாரா தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பின்பு ஓரளவு சுதாரித்துக்கொண்டு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
அது மட்டுமல்லாமல் அவரது சொந்த வாழ்க்கையிலும் பல சர்ச்சைகள் எழுந்தது. முதலில் சிம்புவுடனான காதல் பிரேக்-அப் இல் முடிந்தது. அதன் பின்பு நடன இயக்குனர் பிரபுதேவாவை காதலித்து வந்தார். ஆனால் பிரபுதேவாவின் முதல் மனைவி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அதன்பின்பு சினிமாவே வேண்டாம் என நயன்தாரா சில காலம் ஒதுங்கியிருந்தார். மேலும் சில வருடங்களுக்குப் பின்பு தரமான கம்பேக் கொடுத்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தனது கேரியரில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்து நிற்கிறார்.
மேலும் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார். இதற்கெல்லாம் அவருடைய கடின உழைப்பு முக்கிய காரணமாக இருந்தாலும் அவர் உடனே இருக்கும் அதிர்ஷ்டமும் காரணம் என பலரும் கூறிவருகிறார்கள்.

அதாவது நயன்தாராவின் இடது கையில் ஆறு விரல் உள்ளது. இது போன்ற இருந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என்ற பேச்சு பல காலமாக இருந்து வருகிறது. அந்தவகையில் நயன்தாராவின் ஆறாவது விரல் தான் அவருக்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

அதுவே அது மருவாக இருந்தால் மருத்துவம் மூலம் நயன்தாரா அகற்றி இருப்பார். ஆனால் அந்த அதிர்ஷ்டம் தனது கூடவே இருக்கவேண்டும் என்பதால் தற்போது வரை தனது கைகளில் அந்த ஆறாவது விரலையும் வைத்துள்ளார். மேலும் நயன்தாரா தற்போது திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.