சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு வாரிசு நடிகையாக அறிமுகமான வரலட்சுமி தற்போது தமிழ், தெலுங்கு என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளிவந்த யசோதா திரைப்படத்தில் மிரட்டல் நடிப்பை கொடுத்திருந்த இவர் அடுத்ததாக வீரசிம்மா ரெட்டி திரைப்படத்திலும் வேற லெவல் கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.
வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து அவர் கைவசம் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இருக்கிறது. இப்படி இவர் பிசியான நடிகையாக மாறியதற்கு முக்கிய காரணம் வரலட்சுமி தற்போது தன்னுடைய ரூட்டை மாற்றியதுதான். அதாவது ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
Also read: உண்மை சம்பவத்தை கண் முன் நிறுத்திய IAS வரலட்சுமியின் V3.. முழு விமர்சனம்
மேலும் தைரியமான மற்றும் வில்லி போன்ற கதாபாத்திரங்கள் தான் இவரை தேடி வர ஆரம்பித்தது. தனக்கு இது போன்ற கதாபாத்திரம்தான் பொருந்தும் என்பதை புரிந்து கொண்ட வரலட்சுமியும் அந்த வாய்ப்புகளை ஏற்று நடித்து வந்தார். அந்த வகையில் சர்க்கார், சண்டைக்கோழி 2 ஆகிய திரைப்படங்களில் இவருடைய வில்லத்தனம் அனைவரையும் கவர்ந்தது.
அதனால் தொடர்ந்து அதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த இவருக்கு தற்போது தெலுங்கு திரையுலகிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தற்போது தன்னுடைய உடல் எடையை கூட கணிசமாக குறைத்து விட்ட வரலட்சுமி அடுத்தடுத்து வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.
இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய வரலட்சுமி தனக்கு கிளாமர் போன்ற விஷயங்கள் செட் ஆகாது என்றும் வில்லியாக தொடர்ந்து நடிப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் கிளாமர் படத்தில் நடிப்பதற்கு நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். சில வில்லி கதாபாத்திரங்களுக்கு நான் மட்டும்தான் தகுதியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் சினிமாவை பொருத்தவரை எனக்கு குரு என்றால் அது இயக்குனர் பாலா தான் என்றும் கூறியிருக்கிறார். பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை திரைப்படத்தில் எந்த ஹீரோயினும் ஏற்கத் துணியாத கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் வரலட்சுமி. அவர் அவர் அதில் கரகாட்டம் ஆடும் பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அதன் பிறகு தான் அவருக்கு பல வித்தியாசமான கேரக்டரில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.