சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ரெண்டே படம் ஹிட்டு கொடுத்துவிட்டு ஆணவத்தில் ஆடாதீங்க.! தளபதி இயக்குனரை மிரட்டி விட்ட ஹெச் வினோத்

ஹெச் வினோத் தற்போது உள்ள இளம் இயக்குனர்களில் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுகிறார். தன்னுடைய முதல் படமான சதுரங்க வேட்டை படத்திலேயே முத்திரை பதித்தார். இந்தப் படத்தைப் பார்த்து அஜித் இயக்குனர் வினோத் படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அதனால் உருவானது தான் நேர்கொண்ட பார்வை படம்.

இந்த படமும் வெற்றி பெற இதே கூட்டணியில் அடுத்ததாக வலிமை படம் உருவானது. இப்போது 3-வது முறையாக வினோத், அஜித், போனி கபூர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் துணிவு. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த படத்திற்குப் பிறகு தனுஷின் படத்தை அடுத்ததாக வினோத் இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

Also Read: துணிவு அயோக்கியர்களில் ஆட்டம்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட ஹெச் வினோத்

இந்நிலையில் பேட்டி ஒன்றில் செய்தியாளர் கேட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கு தளபதியின் இயக்குனரை மிரட்டிவிட்டிருக்கிறார் வினோத். அதாவது முன்னெடுப்புகளிலோ, கூட்டங்களிலோ எதிலுமே தட்டுப்படாத ஆளாக இருக்கிறீர்களே? என வினோத்திடம் கேட்டபோது, அதற்கு அவர் தளபதி ரசிகர்களை யோசிக்க வைக்க கூடிய பதிலை சொல்லி இருக்கிறார்.

கூட்டங்களில் கருத்து பேசும் தைரியமும் கிளாரிட்டியும் என்னிடம் இல்லை. அம்பேத்கர் மார்க்ஸை படித்தவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கிற பொழுது, ரெண்டே படம் ஹிட் கொடுத்த பின் கருத்து சொல்ல கிளம்புறது எனக்கு சரிப்படலை என்று லோகேஷ் கனகராஜை தாக்கி பேசி இருக்கிறார் ஹெச் வினோத்.

Also Read: ஒரு வழியாக முதுகில் இருந்து இறங்கிய வேதாளம்.. அடுத்த படத்திற்கு நடிப்பு ராட்சசனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வினோத்

மேலும் தற்போது வாரிசு படத்தை முடித்த பிறகு விஜய் லோகேஷின் தளபதி 67 படத்தில் நடிக்கப் போகிறார். இதனால் பல மேடைகளில் லோகேஷ் இடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலும் அளிக்கிறார். இதை மனதில் வைத்து தான் ஹெச் வினோத் தனக்கு போட்டியாக இருக்கும் லோகேஷ், பொது நிகழ்ச்சிகளில் சில கருத்துக்களை பதிவிடுவதை குறித்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்து விட்டால் இவ்வளவு அதுப்பா! என மறைமுகமாக மிரட்டி விட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி பொங்கலுக்கு லோகேஷ்-அஜித் கூட்டணியில் உருவாக்கி இருக்கும் துணிவு படத்தை திரையிடும் அதே நாளில் தான் விஜயின் வாரிசு படமும் ரிலீஸ் ஆகிறது. ஆகையால் போட்டி மனப்பான்மையில் தல, தளபதி ரசிகர்கள் இருப்பது போலவே அவர்களது இயக்குனர்களின் மனநிலமையும் அப்படிதான் இருக்கிறதோ! என்றும் சிலர் காட்டமாக கருத்து பதிவிடுகின்றனர்.

Also Read: வெளிப்படையாக விஜய்க்கு எதிராக களத்தில் இறங்கிய அஜித்.. இயக்குனரின் அனுமதி இல்லாமல் செய்த வேலை

Trending News