Sun TV : தியேட்டரில் சென்று புதுப்படங்களை பார்ப்பதை காட்டிலும் எத்தனை முறை போட்டாலும் டிவியில் சலிக்காத படங்கள் என்ற சில இருக்கிறது. அதில் சிறந்த 10 படங்களை இப்போது பார்க்கலாம்.
படையப்பா ரஜினிக்கு மாஸ் ஹிட் கொடுத்தது. இதில் நீலாம்பரியாக பட்டையை கிளப்பி இருப்பார் ரம்யா கிருஷ்ணன். இந்தப் படம் பலமுறை தொலைக்காட்சியில் போட்டாலும் அமர்ந்து பார்ப்பதுண்டு.
விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றுதான் கில்லி. அதிலும் திரிஷா மற்றும் விஜய்யின் காம்பினேஷன் பட்டையை கிளப்பியது. இந்த படம் அடிக்கடி சன் டிவியில் ஒளிபரப்பாகும்.
ஒரு குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும் படம் தான் சூரியவம்சம். சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு சரத்குமாருக்கு சுப்ரீம் ஸ்டார் என்ற பெயரையும் இந்த படம் தான் வாங்கி கொடுத்தது.
கமலின் வித்தியாசமான நடிப்பில் வெளியான படம் தான் வசூல்ராஜா எம்பிபிஎஸ். பிரகாஷ்ராஜ் மற்றும் கமல் காம்பினேஷனில் இந்த படம் வெளியானது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக இந்த படம் எடுக்கப்பட்டது.
அதிகமுறை தொலைக்காட்சியில் போடப்படும் 10 படங்கள்
அனுஷ்காவின் மிரட்டலான நடிப்பில் வெளியான படம் அருந்ததி. திகில் கலந்த திரில்லர் படமாக எடுக்கப்பட்ட இந்த படம் அடிக்கடி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
அண்ணன், தம்பி அன்பை வெளிப்படுத்தும் படியாக வெளியான படம் மாயாண்டி குடும்பத்தார். இந்த படத்தை எத்தனை முறை தொலைக்காட்சியில் போட்டாலும் சலிக்காமல் பார்க்கலாம்.
சரத்குமார் மற்றும் குஷ்பூ நடிப்பில் வெளியான படம் தான் நாட்டாமை. இந்த படம் வெளியான போது மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இப்படம் அடிக்கடி சன் தொலைக்காட்சியில் திரையிடப்படுகிறது.
கமல் பெண் வேடமிட்டு நடித்த படம் தான் அவ்வை சண்முகி. காமெடி ஜானரில் எடுக்கப்பட்ட இந்த படமும் தொலைக்காட்சியில் போட்டால் இப்போதும் பார்க்கும் படியாக தான் இருக்கும்.
விஜய், சிம்ரன் காம்போவில் வெளியான படம் தான் பிரியமானவளே. ரொமான்ஸ் கலந்த படமாக வெளியான இப்படம் அப்போது புதுவிதமான கதையாக பலரும் பார்த்தனர். மேலும் இப்படம் அதிக முறை தொலைக்காட்சியில் திரையிடப்படுகிறது.
ஜீவா மற்றும் சந்தானம் ஆகியோரின் நகைச்சுவை கலந்த படமாக வெளியானது சிவா மனசுல சக்தி. ராஜேஷ் இயக்கத்தில் உருவான இந்த படம் மூலம் ஜீவாவுக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது.