சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

2024 இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 படங்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய விஜய் சேதுபதி

Vijay Sethupathi : இந்தியாவில் 2024 இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முதல் இடத்தை Street 2 படம் பெற்றிருக்கிறது. அமீர் கவுசிக் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இரண்டாவதாக அதிகம் தேடப்பட்ட படங்களில் பிரபாஸின் கல்கி 2898 ஏடி படம் இருக்கிறது. இந்த படத்தில் கமலஹாசன், அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர்.

மூன்றாவது இடத்தில் பாலிவுட்டில் வெளியான 12த் பெயில் படம் இடம்பெற்றுள்ளது. லாபட்டா லேடிஸ் மற்றும் ஹனுமான் ஆகிய படங்கள் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பெற்றிருக்கிறது. ஆறாவது இடத்தில் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் உள்ளது.

2024 இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 படங்கள்

விஜய் சேதுபதியின் கேரியரில் மிக முக்கியமான படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. மகாராஜா படம் ஓடிடியில் வெளியாகியும் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்ததாக ஏழாவது இடத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் இருக்கிறது.

மேலும் விஜய்யின் கோட் படம் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் வெளியான இந்த படம் நல்ல வசூலை பெற்றது. அடுத்ததாக ஒன்பதாவது இடத்தில் பிரபாஸின் சலார் படம் இடம்பெற்றுள்ளது.

பத்தாவது இடத்தில் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படம் உள்ளது. இதில் விஜய்யின் கோட் படத்தை பின்னுக்கு தள்ளி விஜய் சேதுபதியின் மகாராஜா படம் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

Trending News