ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

காணாமல் போன 2 நடிகர்கள்.. பாக்யராஜின் சூப்பர் ஹிட் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஹீரோக்கள்

சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் பாக்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் திரைக்கதை மன்னன் என்ற பெயருக்கு சொந்தக்காரரும் பாக்யராஜ் தான். மேலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் செல்லப் பிள்ளையாக பாக்யராஜ் வலம் வந்தார்.

இந்நிலையில் பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படத்தில் நடித்த இரண்டு நடிகர்கள் அதன் பின்பு சினிமாவில் தலை காட்டாமல் உள்ளனர். அதுமட்டுமின்றி அதன் பின்பு என்ன ஆனார்கள், இப்போது என்ன செய்கிறார்கள் என்று எந்த விபரமும் தெரியவில்லை.

Also Read : என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய எம்ஜிஆர்.. கை கொடுத்து காப்பாற்றிய பாக்யராஜ்

அதாவது 1981 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான படம் இன்று போல் நாளை வா. நகைச்சுவையை தாராளமாக அள்ளிக் கொடுத்த படம். இந்தப் படத்தின் கதைய அம்சம் ஒரே பெண்ணை மூன்று நபர்கள் காதலித்து வரும்படி அமைக்கப்பட்டது. இந்த படத்தின் கதையை ஒரே இரவில் பாக்யராஜ் எழுதி முடித்தாராம்.

இதில் பாக்யராஜ், ராதிகா, பழனிச்சாமி, ராம்லி மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதையை வைத்து தான் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் பாக்யராஜுக்கு இணையாக நடித்த இரண்டு ஹீரோக்கள் பழனிச்சாமி மற்றும் ராம்லி.

Also Read : கடைசிவரை பெயர் தெரியாமல் நடிப்பினாலேயே மனதில் நின்ற நடிகர்.. விடாமல் வாய்ப்பு கொடுத்த பாக்யராஜ்

இந்த படத்தில் இவர்கள் காமெடியில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்கள். இன்று போய் நாளை வா படத்தின் மாபெரும் வெற்றிக்கு இவர்கள் இருவரும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இவ்வாறு மாபெரும் வெற்றிக்கு பிறகு பழனிச்சாமி மற்றும் ராம்லி சினிமாவில் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரையும் திரையில் காண முடியவில்லை. அதுமட்டுமின்றி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. மேலும் பாக்யராஜ் கூட அதன் பிறகு இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

palanisamy-ramil

Also Read : தீபாவளியன்று ரிலீசான 6 படங்கள்.. கமல், ரஜினியுடன் போட்டியிட்டு ஜெயித்த விஜயகாந்த், பாக்யராஜ்

Trending News