செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மூன்று பேரும் இல்லாததால் கேள்விக்குறியான 2-ஆம் பாகம்.. செல்வராகவனின் சூப்பர் ஹிட் படத்திற்கு வந்த முட்டுக்கட்டை

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை கொடுக்கக் கூடியவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார். சமீப காலமாக இவரின் படங்கள் தோல்வியை சந்தித்துள்ளதால் அடுத்த படத்தில் ஆவது வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்துள்ளார்.

இவர் இயக்கிய படங்களில் ஒன்று 7 ஜி ரெயின்போ காலனி. நடிகர் ரவி கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமான இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். தற்பொழுது முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க திட்டமிட்டுள்ளார்.

Also Read: செல்வராகவனை எச்சரித்த தம்பி.. ஸ்டேட்டஸை காப்பாற்ற நினைக்கும் தனுஷ்

இதில் 2004 ஆம் ஆண்டு வெளியான 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் புதுமுக நடிகர் அறிமுகம் ஆகி இருந்தாலும் கூட படம் அன்றைய ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு தயாரிப்பாளரும் இயக்குனரும் பச்சைக்கொடி காட்டி உள்ளனர். 

இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இரண்டு ஜாம்பவான்கள் தற்பொழுது உயிரோடு இல்லை. படத்தில் ஹீரோவுக்கு அப்பாவாக நடித்த விஜயன் மற்றும் மனோரமா என இருவரும் இல்லாதது சற்று வருத்தத்தை தருகிறது. இதனால் இயக்குனர் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

Also Read: அண்ணனின் கேரியரை சரிசெய்ய துடிக்கும் தனுஷ்.. மீண்டும் கை கொடுக்குமா இந்த கூட்டணி

இதனைத் தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார் என்பது போல் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்க சோனியா அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

ஏற்கனவே இரண்டு பெரிய ஜாம்பவான்கள் இல்லை என்ற வருத்தத்தில் உள்ள செல்வராகவனுக்கு தற்பொழுது சோனியா அகர்வால் இவ்வாறு கூறி இருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது. இவ்வாறு இந்த மூன்று பேரும் இல்லாததால் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குவதற்கு இதுவும் கூட ஒரு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: செல்வராகவனை தூக்கி விட ரெடியாகும் பார்ட் 2 படங்கள்.. இயக்குனராக ரீ என்ட்ரி, நடிப்புக்கு குட் பாய்

Trending News