வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரொமான்டிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.. 18 வருடங்களுக்குப் பிறகு வரும் ஹிட் படத்தின் 2ம் பாகம்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படமும் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படங்களை அடுத்து தனுஷ் எந்த மாதிரியான திரைப்படங்களில் நடிக்க போகிறார் என்ற ஆவல் ரசிகர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் அவர் இப்போது ரொமான்டிக் கலந்த காதல் திரைப்படத்தில் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம்.

அதாவது 18 வருடங்களுக்கு முன் வெளியாகி சக்கை போடு போட்ட ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருக்கிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் 7ஜி ரெயின்போ காலனி.

Also read: ஆடுகளம் படத்தில் நடிக்காமல் கோட்டை விட்ட பிரபல நடிகர்.. வாய்ப்பை பயன்படுத்தி 2 விருது வென்ற தனுஷ்

முழுக்க முழுக்க இளசுகளை கவரும் வகையில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் நல்ல பாராட்டுகளை பெற்றதோடு விருதுகளையும் வாங்கி குவித்தது. அந்தப் படத்தை தான் தற்போது இரண்டாம் பாகமாக உருவாக்கும் முனைப்பில் செல்வராகவன் இருக்கிறாராம். ஆனால் அந்த திரைப்படத்தில் நடித்த சில முக்கிய நடிகர்கள் இப்போது உயிருடன் இல்லை.

அந்த வகையில் செல்வராகவன் இதை வித்தியாசமான கதைக்களத்துடன் கொடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். மேலும் அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரவி கிருஷ்ணா இப்போது ஆள் அட்ரஸ் தெரியாமல் இருக்கிறார். அதேபோன்று ஹீரோயின் சோனியா அகர்வால் தற்போது திருமணம், விவாகரத்து ஆகியவற்றால் பட வாய்ப்புகள் இல்லாமல் வெப் சீரிஸ் பக்கம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

Also read: கேப்டன் மில்லருக்கு பின் போலீசாக மிரட்டும் தனுஷ்.. அஜித்தின் அஸ்தான இயக்குனர் தயார் செய்த உண்மை கதை

அதனாலேயே செல்வராகவன் தற்போது தனுசுக்கு தூது விட்டிருக்கிறாராம். கடைசியாக இவர்கள் இருவரும் நானே வருவேன் திரைப்படத்தில் இணைந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த அந்த திரைப்படம் பெரிய அளவில் போகவில்லை. அதை தொடர்ந்து மீண்டும் இவர்களின் கூட்டணி இணைய இருக்கிறது.

மேலும் இந்த படத்தின் முதல் பாகத்தை தயாரித்திருந்த ஏ எம் ரத்தினம் இந்த இரண்டாம் பாகத்தையும் எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார். தற்போது பேச்சு வார்த்தைகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில் இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில் இளைஞர்களின் மனம் கவர்ந்த இந்த திரைப்படம் அடுத்த பாகமாக உருவாக இருப்பது பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: முதல்வருக்கு பயோபிக் ரெடி.. தலைவி பாணியில் தனுஷ் பட நடிகருக்கு வலை வீசிய உதயநிதி

Trending News