திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மூன்று கணவர்களை மணந்த ரஜினி பட 3 ஹீரோயின்கள்.. 5 வருஷத்துக்கு ஒரு முறை புருஷனை மாற்றிய நடிகை

Rajini Actresses Got Married 3 times: இந்த வயதிலும் சூப்பர் ஸ்டார் பழைய எனர்ஜியுடன் படங்களில் நடித்து வருகிறார். அதுவும் ஜெயிலர் படத்தில் தமன்னாவுடன் அவர் ஆடிய பாடல் இன்று வெளியாகி இணையத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் ரஜினியுடன் படத்தில் நடித்த நடிகைகள் சொந்த வாழ்க்கையில் மூன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த மூன்று நடிகைகளுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் முதல் இரண்டு திருமண வாழ்க்கையும் பாதியிலேயே முடிவுற்றாலும் மூன்றாவது கணவருடன் தற்போது வரை வாழ்ந்து வருகிறார்கள். அந்த நடிகைகள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். விஜய்க்கு அம்மாவாக வாரிசு படத்தில் நடித்தவர் ஜெயசுதா.

Also Read : அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் ரஜினி.. பிரம்மாண்டமாக நடக்கப் போகும் ஆடியோ லான்ச்

தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் ரஜினியின் பாண்டியன் படத்தில் அவரது அக்காவாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். இவர் முதலாவதாக வடே ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில காரணங்களினால் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு நிதின் கபூர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில் 2017 ஆம் நிதின் கபூர் மரணமடைந்தார். இந்நிலையில் ஜெயசுதா வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது. அடுத்தபடியாக ரஜினியுடன் அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் ராதிகா.

Also Read : 35 வருடங்களாக பாரதிராஜாவிடமிருந்து ஒதுங்கி இருக்கும் ரஜினி.. ஒரு தடவை பட்டதே போதும்டா சாமி

ஊர்க்காவலன், நல்லவனுக்கு நல்லவன் போன்ற பல படங்களில் ராதிகாவுடன், ரஜினி நடித்திருக்கிறார். இந்நிலையில் ராதிகா முதலாவதாக பிரதாப் போத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இரண்டாவதாக ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

கடைசியாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு இப்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அடுத்ததாக ரஜினியின் பொல்லாதவன் படத்தில் நடித்தவர் நடிகை லட்சுமி. இவர் சிவாஜி காலத்தில் இருந்து மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து விட்டார். லட்சுமி முதலில் பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த கல்யாணம் விவாகரத்தில் மூடிய அதன் பிறகு மலையாள நடிகர் மோகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த வாழ்க்கையும் பாதியிலேயே முடிய இயக்குனர் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது வரை அவருடன் வாழ்ந்து வருகிறார். லட்சுமி சரியாக அடுத்தடுத்து 5 வருடங்களில் மூன்று திருமணங்கள் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : விவாகரத்து கற்றுக் கொடுத்த பாடம்.. ஞானியாய் மாறி ரஜினி பாதையில் செல்லும் தனுஷ்

Trending News