அஜித்துக்கு ஜோடியாகும் 43 வயது நடிகை.. ஏகே 61 அடுத்த ஷூட்டிங் எங்கே தெரியுமா?

ajith
ajith

அஜித், வினோத், போனிகபூர் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து தற்போது இதே கூட்டணியில் உருவாகி வரும் படம் ஏகே 61. இப்படத்திற்காக அஜித் தனது உடலை வெகுவாக குறைத்துள்ளார். மேலும் இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏகே 61 படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிலையில் படக்குழு புனே செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஏகே 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்ற கேள்வி இணையத்தில் உலாவி வந்தது. தற்போது பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 90களில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக மஞ்சுவாரியர் வலம் வந்தார்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் தனது சொந்த குரலிலேயே மஞ்சுவாரியர் பேசியிருந்தார். இந்நிலையில் மீண்டும் தமிழ் படத்தில் மஞ்சுவாரியர் நடிக்கயுள்ளார்.

சமீப காலமாக அஜித் தொடர்ந்து பாலிவுட் நடிகைகளுடன் நடித்து வந்த நிலையில் தற்போது மலையாள நடிகையுடன் இணைந்துயுள்ளார். மேலும் புனேவில் நடக்க உள்ள படப்பிடிப்பில் மஞ்சு வாரியர் கலந்து கொள்வார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் தொடக்கம் வரை புனேவில் படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது. அசுரன் படத்திலேயே மஞ்சுவாரியர் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் ஏகே 61 படத்திலும் இவருக்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement Amazon Prime Banner