திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சாமானியனை தொடர்ந்து குவியும் பட வாய்ப்பு.. ராமராஜனுடன் ஜோடி போடும் 46 வயது நடிகை

Actor Ramarajan: 90களில் கமல், ரஜினி படங்களை தாண்டி அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்த படங்களாக ராமராஜனின் படங்கள் இருந்தது. ஆனால் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராமராஜன் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதுமட்டுமின்றி நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று வீம்பாக இருந்ததால் பட வாய்ப்பு வராமல் இருந்தது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தின் மூலம் ராமராஜன் மீண்டும் கதாநாயகன் அவதாரம் எடுத்தார். இப்போது சாமானியன் படத்தை தொடர்ந்து ராமராஜனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி அறிமுக இயக்குனர் கார்த்திக் குமார் இயக்கத்தில் 46 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார்.

Also Read : ஹீரோயினா அவங்கதான் வேண்டும்ன்னு அடம்பிடித்த ராமராஜன்.. குயிலை விட்டுட்டு மயிலுக்கு ஆசைப்பட்டதால் விழுந்த அடி

இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக 46 வயது நடிகை நடிக்க இருக்கிறார். அதாவது மீனாவை இந்த படத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறார்களாம். ராமராஜன் இளவயதில் ஹீரோவாக நடித்த போது கூட மீனாவுடன் ஜோடி போட்டதில்லை. ஆனால் இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மீனா ஒரு காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டாலும் இப்போது கிடைக்கும் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். ஆகையால் இப்போது ராமராஜனின் படத்தில் நடிக்க மீனா சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் ஒரு சமூக அக்கறை கொண்ட படமாக எடுக்கப்பட இருக்கிறதாம்.

Also Read : ராமராஜனுக்கு போட்டியாக இறங்கிய லெஜன்ட்.. அடுத்த படத்திற்கு தயாரான அண்ணாச்சியின் புகைப்படங்கள்

அதுவும் இந்த படத்தின் இயக்குனர் ஷங்கரின் தீவிர ரசிகராம். பிரம்மாண்ட படங்களை இயக்கும் சங்கர் தன்னுடைய படத்தில் ஏதாவது சமூக கருத்தை வைத்திருப்பார். அதேபோன்ற படங்களை எடுக்க வேண்டும் என்ற ஆசையால் கதாசிரியராக இருந்த கார்த்திக் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மேலும் ராமராஜன் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் படம் ரிலீஸான பிறகு தான் இவருக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பது தெரியவரும். ஆகையால் சாமானியன் படத்தின் ரிலீஸுக்காக ராமராஜன் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : ராஜ்கிரனை நம்பி மோசம் போன ராமராஜன்.. கூடவே இருந்து குழி பறித்த பரிதாபம்

Trending News