திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி 67ல் படத்துல என்ன டம்மி பீட்சா ஆகிடுவாங்க.. ஷோகேஷ் போட்ட ஸ்கெட்சில் மிஸாகும் 5வது வில்லன் நடிகர்

தளபதி விஜய் வாரிசு படத்தை முடித்த கையோடு லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் இணைய உள்ளார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்க உள்ளார். ஆனால் படம் ஆரம்பிப்பதற்கு முன்பே ஏகப்பட்ட குளறுபடிகள் தளபதி 67 படத்தில் நடந்துள்ளது. அதாவது இந்த படத்தில் 6,7 வில்லன்கள் என்று கூறப்படுகிறது.

அதிலும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்த படத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் தளபதி 67 படத்தில் கமிட் ஆகி இருந்தனர். அதேபோல் சஞ்சய் தத், விஷால், அர்ஜுன், பிரித்விராஜ், நிவின் பாலி, பகத் பாசில் போன்றவர்களும் தேர்வாகினர்.

Also Read : தளபதி 67 க்கு நோ சொன்ன மிஷ்கின்.. விஜய்சேதுபதியால் வந்த திடீர் குழப்பம்

ஆனால் சில காரணங்களால் தளபதி 67 படத்தில் இருந்து ஒவ்வொரு நடிகர்களாக விலகி வருகிறார்கள். இது படக்குழுவுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அர்ஜுன், பிரித்விராஜ், நிவின் பாலி, பகத் பாலில் என அடுத்தடுத்த நபர்கள் தளபதி 67 படத்தில் இருந்து விலகி விட்டனர்.

இப்போது தளபதி 67 படம் தாமதமாகி வருவதால் என்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த முடியாது என்று மிஷ்கின் லோகேஷ் இடம் சொல்லிவிட்டு நைசாக ஜகா வாங்கியுள்ளார். ஆனால் இதற்கு உண்மையான காரணம் அது இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Also Read : பயத்தை காட்டிய தளபதி, லோகேஷ் காம்போ.. அடுத்தடுத்து வில்லனாக நடிக்க மறுக்கும் 4 டாப் நடிகர்கள்

அதாவது இந்த படத்தில் பெரிய வில்லனாக சஞ்சய் தத் கமிட் ஆகியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விஷால் இருக்கிறார். ஆகையால் இவர்களுக்கு பின்னால் நாம் நடித்தால் டம்மி பீஸ் ஆகிவிடுவோம் என்று மிஷ்கின் இப்படத்தில் இருந்து விலகி உள்ளார்.

அதுமட்டுமின்றி ஏற்கனவே விஷால் மற்றும் மிஷ்கின் இடையே வாய்க்கால் தகராறு இருக்கிறது. ஆகையால் தேவையில்லாமல் தளபதி 67 படத்தில் நடித்து பெயரைக் கெடுத்து கொள்ளக்கூடாது என்பதால் நாசுக்காக லோகேஷிடம் கூறி வெளியேறிவிட்டார். இவ்வாறு லோகேஷ் ஒவ்வொரு நடிகருக்கும் போட்ட ஸ்கெட்ச் தற்போது மிஸ் ஆகி வருகிறது.

Also Read : வசூல் வேட்டையாட தொடர்ந்து 6 நாட்களை லாக் செய்த லோகேஷ்.. பண்டிகை நாளை குறி வைக்கும் தளபதி 67

Trending News