திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித்தை விட 10 மடங்கு அதிகமா பயமுறுத்தும் போலா ஷங்கர்.. சர்ச்சையை கிளப்பி, வாயை புண்ணாக்கிய இயக்குனர்

தமிழில் மட்டுமல்ல இந்திய அளவில் அஜித்துக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால் அஜித்தின் சூப்பர் ஹிட் படமான வேதாளம் படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து ரிலீஸ் செய்யப் போகின்றனர். இதற்கான பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் அஜித்தை வைத்து ஒப்பிட்டு பேசி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினியின் ஜெயிலர் திரைப்படமும் அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 11ஆம் தேதி தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள போலா ஷங்கர் திரைப்படமும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகிறது. இந்த இரண்டு படங்களிலும் தமன்னா தான் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Also Read: மாமனாரின் காதலிக்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த ராம்சரணின் மனைவி.. விலை மட்டும் இத்தனை கோடியா?

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் போலா சங்கர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் கோலாகலமாக நடத்தினார்கள்.

இந்த நிலையில் போலா ஷங்கர் படத்தின் இயக்குனர் மெஹர் ரமேஷ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அஜித்தை சிரஞ்சீவியுடன் ஒப்பிட்டு பேசி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

Also Read: சென்னையில் வளர்ந்து அக்கட தேசத்தை மிரளவிடும் 5 ஹீரோக்கள்.. சர்வதேச லெவலில் புகழ்பெற்ற பாகுபலி ஹீரோ

இதில் கலந்துகொண்டு பேசிய போலா சங்கர் படம் ஷங்கர் படத்தின் இயக்குனர் மெஹர் ரமேஷ், ‘வேதாளம் படத்தில் அஜித் நடித்ததை விட பத்து மடங்கு பயமுறுத்தும் அளவுக்கு சிரஞ்சீவி போல ஷங்கர் படத்தில் நடித்துள்ளார்’. அது மட்டுமல்ல போலோ சங்கர் படத்தை வேதாளம் படத்தை விட ரொம்பவே வித்தியாசமான ஸ்கிரீன் உடன் உருவாக்கி இரண்டு படங்களுக்கும் இடையே வித்தியாசத்தை காட்டியிருப்பதாகவும் பேசியிருக்கிறார்

இதை கேட்ட தல ரசிகர்கள், ‘அடிக்கிறது காப்பி, இதுல என்ன ஒரு கெத்து. என்ன சொன்னாலும் கேட்பதற்கு நாங்க கேனப்பயல்களா!’ என்று சிரஞ்சீவி நடிப்பை அஜித்துடன் ஒப்பிட்டு பேசியதற்கு சோசியல் மீடியாவில் வெளுத்து கட்டுகின்றனர். தேவையில்லாமல் பட ப்ரமோஷனுக்காக போலோ சங்கர் படத்தின் இயக்குனர் வாயைக் கொடுத்து புண்ணாக்கி கொண்டார்.

Also Read: உங்களுக்கு ராசியே இல்ல என ஒதுக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்.. வேதனையுடன் அவரே சொன்ன விஷயம்

Trending News