சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

33 வருஷத்தில் 6 படத்தில் மட்டும் நடித்த மகா நடிகர்.. விஜய் படத்தால் மீண்டும் எடுக்கும் விஸ்வரூபம்

Actor Vijay : ஒரு காலகட்டத்தில் சினிமாவில் கோலோச்சி இருந்த நடிகர் ஒருவர் சில காரணங்களினால் மார்க்கெட்டை இழந்தார். அதன்பிறகு கிட்டத்தட்ட 33 வருடங்கள் ஆகியும் 6 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதுவும் இப்போது விஜய்யின் படத்தினால் தான் மீண்டும் ஒரு விஸ்வரூப வளர்ச்சி எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது கிட்டத்தட்ட 12 வருடங்களாக வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர் தான் மைக் மோகன். கமல், ரஜினி படங்களை தாண்டி இவருடைய படங்கள் தான் அப்போது திரையரங்குகளில் அதிக நாள் ஓடியது. பல நடிகருக்கு போட்டியாக மைக் மோகன் வலம் வந்து கொண்டிருந்தார்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவருடைய படங்கள் தொடர் தோல்வியை சந்திக்க ஆரம்பித்தது. அப்போது அவர் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் கூட சினிமாவில் ஓரளவு நிலைத்து நின்றிருக்க முடியும். ஆனால் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று மைக் மோகன் வீராப்பாக இருந்தார்.

Also Read : அஜித்துக்கு போன் போட சொன்ன விஜய்.. அரசியலை ஆட்டம் காண வைக்க போகும் சம்பவம்

விஜய் படத்தால் விஸ்வரூபம் எடுக்கும் பிரபலம்

இதனால் கிட்டத்தட்ட 33 வருடங்களில் 6 படங்கள் மட்டுமே மைக் மோகனால் கொடுக்க முடிந்தது. அதாவது 1991-க்கு பிறகு மோகனின் மார்க்கெட் உடைக்கப்பட்டது. இந்நிலையில் ஹரா என்ற படத்தில் மோகன் நடித்துள்ள நிலையில் தற்போது வரை வெளியாகவில்லை.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல இவ்வளவு நாள் தாமதமாக்கிவிட்டு இப்போது தான் மோகன் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதாவது தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க முன் வந்திருக்கிறார். அந்த வகையில் விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தில் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் மோகனுக்கு நிறைய மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சரியாக பயன்படுத்தினால் இன்னும் சில ஆண்டுகள் மைக் மோகன் நீடிக்கலாம் என பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : தளபதி 68 விஜய் படமே கிடையாது.. டைட்டில்லயே வெங்கட் பிரபு தரப்போகும் சர்ப்ரைஸ்

Trending News