புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

சொதப்பலில் முடிந்த ஆடியோ லான்ச்.. சேனலை சரிகட்ட படாதபாடு பட்ட பிரபலம்

தற்போது திரும்பிய பக்கமெல்லாம் அந்த பிரபல நடிகருடைய திரைப்படத்தைப் பற்றிய பேச்சுகள் தான் இருக்கிறது. சிலகாலம் நடிப்புக்கு பிரேக் விட்டு அரசியலில் பிஸியாக இருந்த அந்த நடிகர் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மிகப்பெரிய அளவில் மாசாக உருவாகி இருக்கும் அந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கிறது. சமீபத்தில் கூட அந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே நடிகருக்கு நெருக்கமான அந்த சேனல் நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை தங்கள் சேனலில் ஒளிபரப்புவதற்கு பேசியிருந்தது.

இதற்காக சில குறிப்பிட்ட தொகையும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின்பு அந்த வீடியோவை பார்த்த சேனல் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏனென்றால் அந்த எடிட்டிங்கில் பல சொதப்பல்கள் இருந்துள்ளது.

அதாவது நடிகர் பேசிக்கொண்டிருக்கும் போது, ரசிகர்கள் கை தட்டும் காட்சியிலும் நடிகர் அமர்ந்திருப்பது போன்று இருந்துள்ளது. இது தவிர இன்னும் சில குளறுபடியும் இருந்திருக்கிறது. அதனால் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியாது என்று சேனல் வட்டாரம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.

இதனால் வேறு வழியில்லாத அந்த நடிகரும் சில பல லட்சங்களை செலவு செய்து மூன்று மணி நேர வீடியோவாக அந்த நிகழ்ச்சியை ரெடி செய்து சேனலுக்கு கொடுத்திருக்கிறார். அதன்பிறகுதான் அந்த நிகழ்ச்சி கடந்த வாரம் சம்பந்தப்பட்ட அந்த சேனலில் ஒளிபரப்பானது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இதனால் தயாரிப்பாளரான அந்த நடிகர் ஏகப்பட்ட செலவுகள் கைமீறிப் போய் விட்டதை எண்ணி சோகத்தில் இருக்கிறாராம். எப்படி இருந்தாலும் படம் இப்போதே நல்ல வியாபாரம் ஆகி வருகிறது. அதன் மூலம் கலெக்சனும் ஏகபோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் நடிகர் போட்ட பணத்திற்கு மேலேயே லாபம் பார்த்து விடுவார் என்று பலரும் பேசி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News