வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அக்கட தேச சந்தானத்திற்கு குவியும் வாய்ப்பு.. சிவகார்த்திகேயன், ரஜினி என எகிறும் மார்க்கெட்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சந்தானம் தன்னுடைய காமெடியின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதை தொடர்ந்து தற்போது அவர் ஹீரோவாகவும் முன்னேறி இருக்கிறார். அதில் இவருடைய படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவரை போலவே தெலுங்கு திரை உலகில் ஒரு நடிகர் இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவருடைய பல படங்களை சந்தானம் இங்கு ரீமேக் செய்து நடித்திருக்கிறார். அந்த வகையில் அக்கட தேசத்தில் பிரபல காமெடியனாக இருக்கும் சுனில் ஹீரோவாகவும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Also read: ஜெயிலர், லியோ கொடுத்த தைரியம்.. சரசரவென தீபாவளிக்கு வரிசை கட்டும் 4 படங்கள்

அந்த வகையில் அவர் நடித்திருந்த ஒரு படத்தை தான் சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என தமிழில் ரீமேக் செய்திருந்தார். இந்நிலையில் சுனில் இப்போது தமிழ் சினிமாவை குறி வைத்திருக்கிறார். அண்மை காலமாகவே மற்ற மொழி நடிகர்கள் தமிழ் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிலும் பான் இந்தியா படங்கள் அதிகமாகி வரும் இந்த சூழ்நிலையில் பிற மொழி நடிகர்களின் வரவும் தமிழ் சினிமாவில் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் சுனில் இப்போது டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முடித்துள்ளார்.

Also read: ஆண்டவன் மேல பாரத்தை போட்டு மாஸ் நடிகரை நம்பும் விஷால்.. வாழ்வா சாவா போராட்டத்தில் வெளிவரும் படம்

அந்த படங்கள் அனைத்தும் தற்போது அடுத்தடுத்து வெளிவர உள்ளது. அந்த வரிசையில் சிவகார்த்திகேயனின் மாவீரன், ரஜினியின் ஜெயிலர், கார்த்தியின் ஜப்பான், விஷாலின் மார்க் ஆண்டனி ஆகிய படத்தில் இவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் இன்னும் பல தமிழ் வாய்ப்புகளும் இவரை தேடி வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அக்கடதேச சந்தானம் இப்போது கோலிவுட்டில் மையம் கொண்டிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: மாமனாரின் இயக்குனரை அலேக்காக தூக்கிய தனுஷ்.. பரபரப்பு கிளப்பிய அடுத்த பட அப்டேட்

Trending News