வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஹீரோ.. மனைவியை வெறுப்பேற்ற போய் ஆப்பு வாங்கிய நடிகர்

டாப் ஹீரோ ஒருவர் சமீப காலமாகவே தன் மனைவியுடன் கருத்து வேறுபாடில் இருந்து வருகிறார். நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் திடீரென ஆளுக்கு ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கின்றனர். பொது விழாக்களில் கூட இருவரும் தனித்தனியாக வருவது சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இது பற்றி விசாரித்ததில் ஹீரோ தன்னுடைய முன்னாள் காதலியுடன் சமீப காலமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே அவர் மீது அதிருப்தியில் இருந்த மனைவிக்கு இந்த விஷயம் கடும் கோபத்தை கொடுத்திருக்கிறது. இருந்தாலும் சில காலம் அவர் அமைதியாகவே இருந்திருக்கிறார்.

Also read: அப்போ இருந்த சீரியலுக்கும், இப்போ இருக்க சீரியல்களுக்கும் உள்ள 5 வித்தியாசங்கள்.. படுக்கையறை காட்சிகளில் சினிமாவையே மிஞ்சும் சீன்கள்

ஆனாலும் அந்த நடிகர் மனைவியை வெறுப்பேற்றுவதற்காகவே முன்னாள் காதலியுடன் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் நடிகர் மனைவியை விவாகரத்து செய்யப்போவதாகவும் கூட கிசுகிசுக்கப்பட்டது.

இப்படி மனைவியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்த நடிகருக்கு இப்போது தரமான ஒரு ஆப்பை வைத்திருக்கிறார் அந்த நடிகை. அதாவது இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அந்த படம் பல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் நடிகை முகம் சுளிக்க வைக்கும் சில காட்சிகளில் நடித்திருந்தது அவருடைய கணவரை கோபமடைய வைத்திருக்கிறது.

Also read: அப்பா பேரை கெடுக்க வந்த வாரிசு.. நடிகைகளுடன் போடும் கும்மாளம்

ஏற்கனவே விரிசல் விட்டிருந்த உறவு இப்போது இந்த விஷயத்தால் மொத்தமாக உடைந்து போய்விட்டதாம். மனைவியின் நடவடிக்கையால் வெறுத்துப் போன நடிகர் இப்போது சதா நேரமும் காதலியே கதி என கிடக்கிறாராம். இப்படி சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக நடிகர் தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டார்.

Trending News