வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரிலீசுக்கு முன்பே சம்பளத்தை ஏற்றிய நடிகர்.. சிம்புவை அப்படியே பாலோ பண்றாரு

சினிமாவில் லக் இல்லை என  பெயர் பெற்ற அந்த நடிகர், தற்போது நல்ல கதை தேர்வுகளின் மூலம் தன்னை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். ஆரம்பத்திலிருந்தே விடா முயற்சி செய்தவர் இப்பொழுது சில பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக மாறிவிட்டார்.

இந்நிலையில் சிம்புவை போல அவரும் தன் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளார். சிம்பு மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை 20 கோடிகள் ஆகிவிட்டார். இன்னும் அவர் சம்பளம் உயரும் என்பதில் ஆச்சரியமில்லை. அந்த அளவிற்கு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதைப்போல இப்பொழுது அருண் விஜய் தனது சம்பளத்தை 5 கோடியிலிருந்து 7 கோடிகளாக மாற்றிவிட்டார். ஹரி இவரை வைத்து இயக்கிய யானை படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றது.

யானை படத்திற்கு பிறகு அருண் விஜயின் நான்கைந்து படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இதனால் இந்தப் படம் வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் இசையமைத்த இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இவர்களுடன் சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா, சரத்குமார், அம்மு அபிராமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஹரி கடைசியாக சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி சூப்பர் ஹிட் அடித்த பிறகு நான்கு வருடங்கள் எந்தப் படமும் இயக்காமல் தற்போது அருண் விஜய்யும் யானை படத்தை பார்த்து பார்த்து இயக்கியுள்ளார்.

இந்தப் படம் இயக்குனர் ஹரியின் மற்ற படங்களைப் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாகவே எடுத்திருப்பதாக சமீபத்தில் ஹரி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். ஆகையால் யானை படத்திற்கு பிறகு சிம்புவை போல் அருண் விஜய்யும் தன்னுடைய சம்பளத்தை ஏற்றி சினிமாவில் ஒரு ரவுண்டு திட்டமிட்டுள்ளார்.

Trending News