வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Gossip: நல்லா இருந்த குடும்பத்துக்கு வைத்த வேட்டு.. நடிகர் மனைவியை பிரிய காரணமே அவர் தானாம்

Gossip: விவாகரத்து என்பது இப்போது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. நினைத்தால் திருமணம் நினைத்தால் டைவர்ஸ் என பிரபலங்கள் பெரும் அக்கப்போரை கூட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் இளம் நடிகர் தற்போது தன் மனைவியை பிரிய காரணமே அந்த மகா பிரபு தானாம். கடந்த சில வருடங்களாகவே அதிர்ச்சியை கிளப்பும் வகையில் அடுத்தடுத்து பிரபலங்கள் எல்லாம் விவாகரத்து முடிவுக்கு வருகின்றனர்.

அந்த விவகாரம் வெளியே வரும் போதெல்லாம் இந்த நடிகரின் தலை தான் உருளும். அப்படித்தான் தற்போது நடந்துள்ள விவாகரத்துக்கும் இவரையே அனைவரும் கை காட்டுகின்றனர்.

இந்த நடிகருடன் தன் கணவர் நட்போடு இருப்பது மனைவியை கடுப்பாக்கி இருக்கிறது. அதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே வீட்டில் பெரும் பிரச்சனை நடந்து கொண்டிருந்ததாம்.

நடிகரும் மனைவி பேச்சை கேட்காமல் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டிருக்கிறார். அதன் விளைவு தான் தற்போது இருவரும் பிரிய முடிவெடுத்திருக்கின்றனர்.

இதில் நடிகர் மேல் தான் பெரும் தப்பு இருப்பதாக கூறுகின்றனர். சாதாரணமாகவே அவர் கொஞ்சம் திமிரோடு தான் இருப்பாராம். அதனாலேயே மனைவியை கண்டுக்காமல் இஷ்டத்துக்கு ஜாலி செய்து இருக்கிறார்.

பொறுத்துப் பார்த்த மனைவி இப்போது தடாலடியாக முடிவெடுத்து விட்டார். ஆக மொத்தம் அந்த நடிகரால் இன்னும் எத்தனை குடும்பங்கள் பிரியப் போகிறதோ தெரியவில்லை என கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.

Trending News