வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூட்டிங் ஸ்பாட்டில் திடீரென கிஸ் அடித்த நடிகர்.. கதறி அழுத ஜெமினி கணேசனின் மகள்

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜிக்கு இணையாக இருந்த நடிகர் தான் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவருக்கு நிறைய மனைவிகள், ஏகப்பட்ட குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது அவருடைய பிள்ளைகள் அனைவரும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்குகின்றனர்.

அவர்களில் வெகு பிரபலமாக இருப்பவர்தான் பாலிவுட் நடிகை ரேகா. அங்கு ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். ஒருமுறை சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த எதிர்பாராத சம்பவத்தால் இவர் கதறி அழுதுள்ளார்.

Also read:சாம்பார் என ஜெமினிக்கு பெயர் வந்ததன் ரகசியம்.. பல வருட ரகசியத்திற்கு கிடைத்த பதில்

அதாவது ரேகா நடிகர் பிஸ்வாஜித் சட்டர்ஜி உடன் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு காட்சி முத்தம் கொடுப்பது போல் இருந்திருக்கிறது. ஆனால் இயக்குனர் ரேகாவிடம் இந்த காட்சியை பற்றி கூறாமலேயே படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்.

ஷாட் ரெடி ஆனதும் கேமராவுக்கு முன் வந்த ரேகாவுக்கு அந்த நடிகர் திடீரென முத்தம் கொடுத்திருக்கிறார். இதனால் அவர் அதிர்ந்து போயிருக்கிறார். அப்போது டைரக்டர் கட் சொல்லாமல் இருக்கவே ஐந்து நிமிடங்கள் இந்த காட்சி நீடித்திருக்கிறது.

Also read:ஜெமினி மறைத்த அந்த ரகசியம்.. திருமணத்திற்குப் பின் வெளிவந்த உண்மை

இதனால் கடும் அதிர்ச்சியில் இருந்த ரேகா ஷூட்டிங் முடிந்த பிறகு தனியாக அமர்ந்து கதறி கதறி அழுதிருக்கிறார். இதைப் பார்த்த அந்த நடிகர் உடனே அவரிடம் டைரக்டர் உங்களிடம் இந்த காட்சி பற்றி சொல்லவில்லை என்பது எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் சமாதானம் ஆகாத ரேகா தொடர்ந்து அழுதிருக்கிறார். பிறகு எப்படியோ இயக்குனரும், நடிகரும் ரேகாவை சமாதானம் செய்து அந்த படத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர். பாலிவுட்டில் ரொமான்ஸ் காட்சிகளில் அசால்டாக நடித்த தள்ளும் ரேகா ஒரு முத்த காட்சிக்கு இப்படி கதறி அழுதது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Also read:ஜெமினி கணேசன் இடத்தை பிடித்த காதல் மன்னன்.. அந்த மாதிரி படங்கள் தான் இவர் டார்கெட்டே

Trending News